சென்னையில் மட்டும் 2008 பேர் பாதிப்பு.. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 508 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட மாவட்ட வாரியான பட்டியல் இதோ, பாருங்கள்: செங்கல்பட்டு 38, சென்னை 279, கடலூர் 68, தர்மபுரி 1, திண்டுக்கல் 7, கள்ளகுறிச்சி 38, காஞ்சிபுரம் 1 பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி 2, மதுரை 1, நாமக்கல் 15, நீலகிரி 4, பெரம்பலூர் 1, சேலம் மற்றும் தென்காசி தலா 1, தேனி 5, திருவள்ளூர் 18, திருநெல்வேலி மற்றும் திருப்பூர் தலா 1, விழுப்புரம் 25, விருதுநகர் 1. இவ்வாறு நோய் பாதிப்பு பதிவாகியுள்ளது.

கோயம்பேடு
இன்றைய நிலவரப்படி சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரில் அதிகம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இவர்கள் அனைவரும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.

கடலூர் 2வது இடம்
இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், 2008 பேருடன் சென்னை முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கடலூர் மாவட்டம் இருக்கிறது. 229 பேர் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த பாதிப்பு
கோவை மாவட்டத்தில் 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு 136 பேர், மதுரை 91, திண்டுக்கல் 98, ஈரோடு 70, கரூர் 44, நாமக்கல் 76, தென்காசி 50, தஞ்சாவூர் 58, திருவண்ணாமலை 25, திருவள்ளூர் 95, தூத்துக்குடி 27, திருநெல்வேலி 64, திருப்பூர் 114, விழுப்புரம் 159. இதுதான் பாதிப்பு நிலவரம். ஆகமொத்தம், தமிழகத்தில் 4 ஆயிரத்து 58 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

பணியாளர்கள்
இந்த நிலையில்தான், வீட்டு வேலை பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம் என்ற தளர்வு திரும்பப் பெறப்படுகிறது. முன்பு சென்னை ஆணையர் அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று வேலைக்கு செல்லலாம் என அரசு கூறியிருந்தது. பாதிப்பு அதிகரித்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications