கொரோனா.. சென்னையில் 163 பேர் பாதிப்பு.. ஈரோடு, நெல்லையில் நோயாளி எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா நோய் தோற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது . இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
Recommended Video
இன்று மாலை 6 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ். அப்போது அவர் கூறுகையில் இந்த தகவலை தெரிவித்தார்.

இதன்பிறகு மாவட்ட வாரியாக, கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை வெளியிடப்பட்டது. அதுகுறித்த தகவலை பாருங்கள்:
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 163ஆக அதிகரித்துள்ளது. அங்கு இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் 46, திருநெல்வேலி 56, திருச்சி 36, நாமக்கல் 41, ராணிப்பேட்டை 27, செங்கல்பட்டு 28, மதுரை 25, கரூர் 23, தேனி 40, தூத்துக்குடி 22, விழுப்புரம் 20, திருப்பூர் 26, கடலூர் 13, சேலம் 14, திருவள்ளூர் 13, திருவாரூர் 13, விருதுநகர், தஞ்சை தலா 11, நாகை 12, திருப்பத்தூர் 16, திருவண்ணாமலை 9, கன்னியாகுமரி 14, காஞ்சிபுரம் 6, சிவகங்கை 6, வேலூர் 11, நீலகிரி 4, தென்காசி 3, கள்ளக்குறிச்சி 3, ராமநாதபுரம் 2, அரியலூர் மற்றும் பெரம்பலூர் தலா 1. ஆக மொத்தம், தமிழகத்தில் மொத்தம் 834 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது. நெல்லையில் இன்று, புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications