Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆருத்ரா கோல்டு.. நிதி நிறுவனங்களில் பணத்தை பறிகொடுத்த மக்களுக்கு நல்ல செய்தி.. நம்பிக்கை தந்த ஐஜி!

ரூ.13, 700 கோடி மோசடி செய்த நிதி நிறுவனங்களிடம் பணத்தை பறிகொடுத்த மக்களுக்கு உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் கூறினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாட்டில் 'ஆருத்ரா கோல்டு, 'ஹிஜாவு', 'எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ்.', 'எல்பின்' ஆகிய 4 நிதி நிறுவனங்கள் முதலீட்டுத்தொகை பெற்று பொதுமக்களிடம் ரூ.13 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்திருக்கின்றன. இந்த நிறுவனங்களில் ஏமாந்த பொதுமக்களுக்கு உரிய முதலீட்டுத்தொகையை மீட்டு தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது: தமிழ்நாட்டில் 4 நிதி நிறுவனங்கள் அதிக வட்டித்தொகை தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் முதலீட்டுத் தொகையை பெற்று பெரிய அளவில் மோசடி செய்துள்ளன.

இந்த நான்கு நிறுவனங்களும் முதலீட்டுத்தொகைக்கு மாத வட்டியாக 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும் என்று கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. இதை நம்பி பொதுமக்களும் முதலீட்டுத் தொகை செலுத்தி உள்ளனர். ஆனால் பொதுமக்களை அந்த நிறுவனங்கள் ஏமாற்றி உள்ளன.

ஹிஜாவு

ஹிஜாவு

அப்படி சமீபத்தில் ஏமாற்றிய நிறுவனங்களை பற்றி இப்போது பார்ப்போம். சென்னை அமைந்தகரையில் செயல்பட்ட 'ஆருத்ரா கோல்டு' நிறுவனம், கீழ்ப்பாக்கத்தில் இயங்கிய 'ஹிஜாவு' நிறுவனம், கிண்டியில் செயல்பட்ட 'எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ்.' நிறுவனம், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய 'எல்பின்' நிறுவனம் ஆகிய 4 நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் முதலீடு தொகையை பெற்று பெரிய அளவில் மோசடி செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ரெட் கார்னர்

ரெட் கார்னர்

இந்த நிதி நிறுவனங்களில் மோசடி செய்வீட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களை கைது செய்வதற்கு சி.பி.ஐ. போலீஸ் உதவியுடன் சர்வதேச போலீஸ் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை பிடித்து கொடுக்க 'ரெட் கார்னர்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

முதலீடு தொகை

முதலீடு தொகை

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது 'லூக் அவுட்' நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. 'ஆருத்ரா கோல்டு, 'ஹிஜாவு', 'எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ்.', 'எல்பின்' ஆகிய 4 நிதி நிறுவனங்களும் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 84 ஆயிரம் பேர்களிடம் ரூ.13 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு முதலீட்டுத்தொகை பெற்று மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சொத்துக்கள் பறிமுதல்

சொத்துக்கள் பறிமுதல்

இந்த 4 நிறுவனங்களில் 1,115 வங்கிக்கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான கார்கள் போன்ற அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அசையா சொத்துகளை கணக்கிட்டு வருகிறோம். மேற்கண்ட நிதி நிறுவனங்களிடம் பணத்தை இழந்த பொதுமக்கள் கவலைப்படத்தேவையில்லை. அவர்கள் ஏமாந்த பணத்தை நீதிமன்றம் மூலமாக பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மோசடி நிறுவனங்கள்

மோசடி நிறுவனங்கள்

பொருளாதார குற்றப்பிரிவு போலீசை வலுப்படுத்த 28 சப்-இன்ஸ்பெக்டர்களை கூடுதலாக பணி நியமனம் செய்து தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர்கள் மூலம் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்தல், மோசடி நிறுவனங்களின் சொத்துகளை கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

 ஐ.ஜி. ஆசியம்மாள்

ஐ.ஜி. ஆசியம்மாள்

'ஆருத்ரா கோல்டு, 'ஹிஜாவு', 'எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ்.', 'எல்பின்' ஆகிய 4 நிதி நிறுவனங்களில் எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டோம். எல்பின், ஆருத்ரா கோல்டு, ஹிஜாவு ஆகிய 3 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" இவ்வாறு பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+