அரசு பள்ளி மாணவர்களை துபாய் அழைத்து சென்று.. வரலாறு படைத்த பள்ளிக் கல்வித்துறை.. விஐபி போல கவனிப்பு!
சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக அரசுப் பள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்று புதிய வரலாற்றை படைத்திருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை.
Recommended Video
ஆரம்பத்தில் மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதெல்லாம் சாத்தியமா என் அதிகாரிகள் யோசித்த நிலையில், முடியும் என ஊக்கமளித்து அதை நிகழ்த்தியும் காட்டியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
இதன் மூலம் தன்னை பற்றிய துறை ரீதியிலான விமர்சனங்களை தூள் தூளாக ஆக்கியிருக்கிறார் அவர்.

வினாடி வினா
இணையவழியில் நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 67 பேர் துபாய்க்கு கல்விச் சுற்றுலா செல்ல தேர்வாகினர். அதன்படி துபாய் அழைத்துச் செல்லப்பட்ட மாணவ, மாணவிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பயணித்தார். கடந்த 10ஆம் தேதி வியாழக்கிழமை காலை திருச்சி விமான நிலையம் வந்த அமைச்சர் அன்பில் மகேஷ், ஏர் இந்தியா விமானத்தில் எக்னாமி கிளாஸ் இருக்கையிலேயே அமர்ந்து எளிமையாக மாணவ, மாணவிகளுடன் துபாய் பயணித்தார்.

உற்சாக வரவேற்பு
துபாய் சென்று இறங்கியதும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் ஷார்ஜா விமான நிலைய உயர் அதிகாரிகள், அமீரக திமுக பொறுப்பாளர் மீரான், தொழிலதிபதிகள் சாகுல் ஹமீது, கடையநல்லூர் முஸ்தபா, ஜெசிலா பானு, ஆகியோர் உற்சாக வரவேற்பு கொடுத்து அழைத்துச் சென்றனர். மாணவ, மாணவிகள் 68 பேர் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 5 பேருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற துபாய் வாழ் தமிழர்கள் மதிய உணவாக சுடச்சுட பிரியாணியும் கொடுத்தனர்.

வாஞ்சையான வரவேற்பு
வாஞ்சையான வரவேற்பு நிகழ்வு முடிந்ததும் துபாயில் உள்ள இந்திய தூதரகத்துக்கு மாணவ, மாணவிகள், அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பேசிய துபாய்க்கான இந்திய தூதர் அமன் புரி, தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சியை பாராட்டியதோடு அமைச்சர் அன்பில் மகேஷின் செயல்பாடுகளை பட்டியலிட்டு கவுரப்படுத்தினார். அங்கு உயர் தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சி முழுவதையும் ஜவேரியா ரஷீத் ஒருங்கிணைத்திருந்தார்.

லூவர் மியூசியம்
லூவர் மியூசியம், துபாய் மன்னர் உலகத் தலைவர்களை சந்திக்கும் இடமான கஸர் அல் வதான் பேலஸ், உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு மாணவ, மாணவிகளுடன் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தாம் ஒரு அமைச்சர் என்ற எந்த பகட்டும் இல்லாமல் டூரிஸ்ட் கெய்டு போல் மாணவர்கள் புரியும் வகையில் ஒவ்வொன்றையும் எளிமையாக விளக்கிக் கூறியிருக்கிறார். இதனால் மாணவ, மாணவிகள் செம ஹேப்பி.

ஆர்வமுடன் பங்கேற்பு
இதனிடையே தமிழகத்தில் இருந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் துபாய்க்கு வந்திருக்கிறார்கள் என்ற தகவல் அறிந்ததும் தங்கள் பணிகளை எல்லாம் ஒதுக்கி ஓரம்கட்டிவிட்டு அத்தீப் அன்சாரி, சென்னை ரியாஸ், ஆசிப் மீரான், ஆர்ஜே அஞ்சனா, திருவாரூர் சிவா, நாமக்கல் பிரபு, பரமக்குடி அஸ்லம், கூத்தாநல்லூர் ஏஜிஎம் பைரோஸ் கான் , மதுரை சரத், கடையநல்லூர் கபீர், பட்டுக்கோட்டை இளமுருகன், பிளாக் துலிப் செந்தில், கொரடாச்சேரி ஜாஹிர், பிர்தவ்ஸ் பாஷா, உள்ளிட்ட இன்னும் ஏராளமானோர் தங்கள் அன்பை மாணவர்கள் மீது பொழிந்தார்கள்.

யோசித்த அதிகாரிகள்
இதனிடையே இவ்வளவு பெரிய நிகழ்வு திட்டமிடப்பட்ட போது பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளே ஆரம்பத்தில் தயங்கியதும் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திக் காட்டுவோம் என ஊக்கமளித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்ததால் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்கள் அருள் முருகன், அமுதவள்ளி ஆகிய இருவரையும் அழைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கல்வியாளர் பாராட்டு
இதனிடையே இது தொடர்பாக கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் நாம் பேசிய போது அவர் கூறியதாவது, ''தமிழக பள்ளிக்கல்வித் துறை முன்னெடுத்த இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால் இதை இப்படியே விட்டு விடக்கூடாது. அரசுப் பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் இது போன்ற நடவடிக்கைகளை தொடர வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications