தேதி இன்னும் அறிவிக்கல...இந்த செலவு கணக்குல வராது...தெளிவுபடுத்திய தேர்தல் கமிஷனர்
சென்னை : தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் நடைபெறும் பிரச்சாரத்தின் செலவுகளை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துகொள்ளாது என மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சமூக நலத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் மாற்றத்திறனாளிக்கு வாகனம் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும். மாற்றத்திறனாளிகள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம். தமிழகத்தில் 4.5 லட்சம் மாற்றத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் பூத் வரை அவர்களது வாகனத்தில் சென்று வாக்களிக்கலாம் என்றார்.
தற்போது தேர்தலுக்கு தேவையான 90 சதவிகித மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. இன்னும் 5 நாட்களில் மீதமுள்ள இயந்திரங்கள் தமிழகம் வர உள்ளன. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் நடைபெறும் பிரச்சாரத்தின் செலவுகளை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துகொள்ளாது. இது தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை அனுப்பப்படும் என தெளிவுபடுத்தினார்.
இணைய வழி மூலம் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் கண்காணிக்கும் என்றும் தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications