நெருங்கும் தேர்தல்.. தமிழ்நாட்டுக்கான குழுவை அறிவித்தது காங்கிரஸ் கட்சி.. லிஸ்ட்டில் 35 பேர்!
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் அடங்கிய தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. பூத் கமிட்டி பணிகள் தொடங்கி, கூட்டணி பேச்சுவார்த்தைகள் வரை அனைத்தும் சூடுபிடித்துள்ளன. சீட் பெறுவதற்காக ஏராளமானோர் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவில் 35 பேர் இடம் பிடித்துள்ளனர். சிட்டிங் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பலரும் இந்த தேர்தல் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அதன்படி, ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை, கே.வி. தங்கபாலு , ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த் பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன் நாச்சியப்பன், செல்லகுமார், மாணிக்கம் தாகூர், குமரி அனந்தன், மணி சங்கர் ஐயர், தனுஷ்கோடி ஆதித்தன், கிருஷ்ணசுவாமி, கே.ஆர்.ராமசாமி, விஷ்ணு பிரசாத், ஜே.எம்.ஆரூண், நாசே ராமச்சந்திரன், சிடி மெய்யப்பன், மயூரா ஜெயக்குமார், மோகன் குமார மங்கலம், ஆர்ம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ உட்பட 35 பேர் காங்கிரஸ் தேர்வு குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications