சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மே 7ல் முதல்வராக பதவி ஏற்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.. நாளை ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7ம் தேதி பதவி ஏற்க உள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித்திடம் ஆட்சி அமைக்க ஸ்டாலின் நாளை உரிமை கோருகிறார்.

Recommended Video

    Assembly Elections 2021 Results : மே 7ல் தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்

    தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்றுள்ளது.

    Tamilnadu election result 2016: DMK chief Stalin will swear in as TN CM on May 7 and stake claim tomorrow

    இதில் திமுக தனியாக 125 இடங்களில் வெற்றி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களிலும், அதிமுக தனியாக 65 இடங்களிலும் வென்றுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    ஆளுநர் மாளிகைக்கு ராஜினாமா கடிதத்தை முதல்வர் பழனிசாமி அனுப்பி உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில் பழனிசாமி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இதையடுத்து தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7ம் தேதி பதவி ஏற்க உள்ளார். தமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைக்க நாளை உரிமை கோருகிறார் ஸ்டாலின். திமுக எம்எல்ஏக்கள் உடன் நாளை நடக்க உள்ள மீட்டிங்கிற்கு பின் ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

    கருத்து கணிப்புகள்தான் அடிச்சு சொல்லுச்சே... பாமகவை நம்பி தோல்வியை தழுவிய எடப்பாடி வியூகம் கருத்து கணிப்புகள்தான் அடிச்சு சொல்லுச்சே... பாமகவை நம்பி தோல்வியை தழுவிய எடப்பாடி வியூகம்

    ஆளுநர் மாளிகையில் சிறிய அளவில் பதவி ஏற்பு நடக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக பெரிய ஆரவாரம் இன்றி, பதவி ஏற்பு கொண்டாட்டங்கள் இல்லாமல், தலைவர்களுக்கு அழைப்பு இல்லாமல் இந்த விழா நடக்கும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Tamilnadu election result 2016: DMK chief M K Stalin will swear in as TN CM on May 7 and stake claim tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X