• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கண்ணில் கண்ணீரோடு.. கையெடுத்து கும்பிட்ட "அந்த" நொடி.. ஸ்டாலின் தலைவரானது இங்குதான்.. புது சகாப்தம்

|

சென்னை: பல்வேறு ஏளனங்கள்.. எதிர்ப்புகள்.. சவால்களை தாண்டி தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்கிறார். ஸ்டாலின் தன்னை ஒரு சிறந்த நிர்வாகி என்று பல இடங்களில் நிரூபித்துவிட்டே ஆட்சி கட்டிலில் அமர்கிறார்!

கனவு கான வேண்டியதுதான்.. இலவு காத்த கிளியாக இருக்க வேண்டியதுதான்.. இவருக்கு எல்லாம் முதல்வராகும் யோகம் ஜாதகத்திலேயே இல்லை என்று பல கிண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்ட.. ஏளனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின்.. தமிழகத்தின் அடுத்த முதல்வராகிறார்.

நாள் குறிக்கப்பட்டுவிட்டது.. மே 7ம் தேதி தமிழகத்தின் புதிய முதல்வராக, மிக இக்கட்டான சூழ்நிலையில் ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். எதிர்ப்புகளை, விமர்சனங்களை தவிடுபொடியாக்கி திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த புதிய அத்தியாயம் தொடங்குகிறது.

எத்தனை சோதனை.. எத்தனை வேதனை.. மீறி ஜெயிச்சிட்டோம்! - மு.க.ஸ்டாலின் அறிக்கைஎத்தனை சோதனை.. எத்தனை வேதனை.. மீறி ஜெயிச்சிட்டோம்! - மு.க.ஸ்டாலின் அறிக்கை

வாய்ப்பு

வாய்ப்பு

கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் வாய்ப்பு, ஆட்சியில் அமரும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு பல முறை வந்தன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் போதே அதிமுகவில் பிரச்சனை ஏற்பட்டது. கட்சி இரண்டாக பிரிந்தது. எம்எல்ஏக்கள் குழு குழுவாக சேர்ந்தனர். அப்போதே ஸ்டாலினுக்கான முதல்வர் வாய்ப்பு தேடி வந்தது.

 நுழையவில்லை

நுழையவில்லை

வேறு ஒரு அரசியல் தலைவராக இருந்தால் கண்டிப்பாக இந்த சூழ்நிலையை பயன்படுத்தி எப்படியும் ஆட்சியை கைப்பற்றி இருப்பார். ஆனால் திமுகவோ, ஸ்டாலினோ அதை செய்யவில்லை. அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்காக வழக்கு தொடுத்ததே ஒழியே திமுக வேறு எந்த வகையிலும் அதிமுகவின் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிக்கவில்லை.

 ரிசார்ட்

ரிசார்ட்

ரிசார்ட் அரசியல் கொடி கட்டி பறந்த போது கூட திமுக எந்த தவறையும் செய்யவிலை. நாம் எதிர்க்கட்சி.. நம் பணியை செய்வோம். ஆட்சி கவிழ்ந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் திமுகவும், ஸ்டாலினும் இருந்தார்கள். வந்தால் நேர் வழியில் வருவோம்.. ஆட்சியை பிடிப்போம் என்பதே திமுகவின் கொள்கையாக இருந்தது. நினைத்தபடியே.. காத்து இருந்து ஜனநாயக ரீதியாக முதல்வர் இருக்கையில் ஸ்டாலின் தற்போது அமர உள்ளார்.

கிண்டல்

கிண்டல்

ஸ்டாலினுக்கு சரியாக பேச தெரியவில்லை.. மேடையில் பேசும்போது வாய் குளறுகிறது.. கணக்கில் சொதப்புகிறார் என்றெல்லாம் பல கிண்டல்கள், கேலிகளை எதிர்கொண்டு, தற்போது முழுக்க முழுக்க தனது உழைப்பால் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். எந்த ஏளனத்தையும் தலையில் ஏற்றுக்கொள்ளாமல்.. தனது பணியில் கவனம் செலுத்தி ஸ்டாலின் இந்த வெற்றியை பெற்றுள்ளார். 10 வருடமாக ஆட்சியில் இல்லை, கையில் பணம் இல்லை, மத்தியில் இருக்கும் பாஜகவோ அசுர பலத்தோடு இருக்கிறது என்று பல பல சவால்களை எதிர்கொண்டு ஸ்டாலின் இந்த மகுடத்தை சூடி உள்ளார்.

மகுடம்

மகுடம்

கருணாநிதி தலைமையிலான திமுக ஒரு inclusive கட்சியாக இருந்தது. அழகிரி, துரைமுருகன், ஏவ வேலு, டி ஆர் பாலு என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உள்ளூர் தலைகள்தான் திமுகவை கட்டுப்படுத்தினார்கள். ஆனால் ஸ்டாலினின் திமுக 2.0 அப்படிப்பட்டது கிடையாது. இது ஜெவின் அதிமுக போன்ற centrist கட்சி என்றுதான் சொல்ல வேண்டும். மாவட்ட செயலாளர்கள் வலிமையாக இருந்தாலும் ஸ்டாலின் வைத்ததே சட்டம், அவர் எடுப்பதே இறுதி முடிவு என்பதுதான் தற்போது திமுகவின் புதிய நிலை... தற்போதைய தேவையும் அதுதான்.

தனி ஆள்

தனி ஆள்

திமுகவில் ஏற்பட்டு இருக்கும் இந்த ஒற்றை தலைமை ஒரு முதல்வராக ஸ்டாலினுக்கு பெரிய பலத்தை கொடுக்கும். லோக்சபா தேர்தல் வெற்றி அதன்பின் சட்டசபை தேர்தலில் வேட்பாளர் தேர்வு தொடங்கி கூட்டணி முடிவு வரை எல்லாமே ஸ்டாலினின் தனிப்பட்ட முடிவுதான். ஒற்றை நபராக உழைத்து உழைத்து ஸ்டாலின் திமுகவை வெற்றிபெற வைத்து இருக்கிறார். ஸ்டாலின் வேண்டுமானால் பெரிய பேச்சாளாராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தன்னை மிக சிறந்த நிர்வாகி என்பதை இந்த திமுகவின் வெற்றி மூலம் நிரூபித்து காட்டி இருக்கிறார்.

 நிரூபணம்

நிரூபணம்

ஒற்றை நபராக சுழன்று சுழன்று பிரச்சாரம், கூட்டணி கட்சிகளுக்கு பிரச்சாரம், பல்வேறு அழுத்தங்களுக்கு இடையே கட்சியை மிகுந்த கட்டுப்பாட்டோடு வழி நடத்தி , இக்கட்டான சூழ்நிலையில் திமுகவை வெற்றிபெற வைத்துள்ளார் ஸ்டாலின். இப்போது மட்டுமல்ல.. தன்னை ஒரு சிறந்த நிர்வாகி என்பதை பல முறை ஸ்டாலின் நிரூபித்துவிட்டதுதான் தற்போது ஆட்சி கட்டிலில் அமர்கிறார்.

ஆட்சி

ஆட்சி

ஸ்டாலினின் அரசியல் திறனுக்கு ஒரு சின்ன உதாரணம்.. 2018 ஆகஸ்ட் 7ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பின்.. அவரின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர மறுக்கிறது தமிழக அரசு. குடும்பத்தோடு சென்று ஸ்டாலின் முதல்வரை சந்திக்கிறார்.. முதல்வர் அப்போதும் கூட "நோ" சொல்கிறார்.. தலைமை செயலாளர் கிரிஜாவை சந்திக்க சொல்கிறார்.. அவரும் நோ சொல்கிறார்.

ஸ்டாலின் முடிவு

ஸ்டாலின் முடிவு

ஏமாற்றத்தோடு திரும்பி வந்த ஸ்டாலினுக்கு முன் இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தது. ஒன்று.. திமுக படையை திரட்டிக்கொண்டு தடையை மீறி மெரினாவில் உடலை அடக்கம் செய்யலாம். ஸ்டாலினின் கண் அசைவிற்காக பல லட்சம் பேர் அப்போது காத்து இருந்தனர். பெரிய போராட்டம் வெடித்து இருக்கும். இல்லை அரசின் முடிவை ஏற்று வேறு இடத்தில் உடலை அடக்கம் செய்யலாம்.. ஆனால் ஸ்டாலின் அங்குதான் தனித்து நின்றார்.. அப்பாவை பறிகொடுத்த இரவிலும் கூட நீதிமன்ற படியை தட்டினார்.

போராட்டம்

போராட்டம்

அப்பாவை இழந்த நாளிலும் கூட... நேர் வழியில் முறையாக சட்ட போராட்டம் நடத்தினார் ஸ்டாலின்..எந்த ஒரு கட்சிக்கு இப்படி ஒரு யோசனை வரும்? காத்திருந்து மறுநாள் சட்ட ரீதியாக மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதி பெற்றார். காலை 9 மணி வரை தீர்ப்புக்காக காத்து இருந்த ஸ்டாலின்.. தீர்ப்பு வந்த பின் கண்களில் கண்ணீரோடு.. மக்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டார்.. ஸ்டாலின் கண்ணீர்விட்டு.. கும்பிட்ட அந்த நொடிதான் அவர் திமுகவை வழி நடத்த போகும் தலைவராக உருவெடுத்த நொடி.

கருணாநிதி

கருணாநிதி

கருணாநிதி மகன் என்பதை தாண்டி.. தானும் ஒரு தலைவன்தான் என்பதை ஸ்டாலின் அந்த நொடி நிரூபித்தார். அவரின் இந்த தேர்தல் வெற்றிக்கான விதை அந்த நொடிதான் போடப்பட்டது. அதை இப்போது அறுவடை செய்து இருக்கிறார். இதுவரை எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின்.. தற்போது ஸ்டாலின் 2.0 வாக உருவெடுத்து உள்ளார். உண்மையான சவால் இனிதான் ஸ்டாலினுக்கு காத்து இருக்கிறது.

சவால்

சவால்

கொரோனா இரண்டாம் அலை, வேக்சின் விநியோகம், தமிழக அரசின் கடன் சுமை, பொருளாதார வீழ்ச்சி, , மத்திய பாஜகவின் அழுத்தம், பாலியல் குற்றங்கள் என்று ஸ்டாலின் சந்திக்க வேண்டிய சவால்கள் இனிதான் இருக்கின்றன. பல சவால்களை இதுவரை நேர் வழியில் எதிர்கொண்ட ஸ்டாலின்.. இனியும் அப்படியே செயல்படுவார் என்று நம்புவோம்.. "முதல்வர்" ஸ்டாலின் இனி எடுத்து வைக்க போகும் ஒவ்வொரு அடியும் திமுகவிற்கு மட்டுமின்றி மொத்த தமிழகத்தின் எதிர்காலத்தையும் மாற்ற போகிறது!

English summary
Tamilnadu election result 2016: The Rise of M Stalin from a Politician to the Leader of TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X