நீங்க இபி பில் கட்ட போறீங்களா? மின்கட்டணம் அதிகமா வருதா? கூடுதல் தொகை நிர்ணயம்? மின்சார வாரியம் பளிச்
சென்னை: மின்துறை வைப்பு தொகை குறித்த அறிவிப்பை வெளியிடப்பட்டு வருவது பலரையும் கலக்கமடைய வைத்துள்ளது... இது குறித்த அறிவிப்பு ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதில் மின்சார வாரியம் சில விஷயங்களை தெளிவுப்படுத்தியும் உள்ளது.
தமிழகத்தில் மின் உற்பத்தி, மின் பகிர்மானம் மற்றும் தொடரமைப்பு ஆகிய பணிகளை ஒருங்கிணைத்து TNEB எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது.
இதன் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco), தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (TANTRANSCO) என 2 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மின்மீட்டர்கள்: இதில் ஒவ்வொரு வீடாக சென்று மின் மீட்டர்களில் பதிவாகும் ரீடிங்குகளை கணக்கெடுக்கும் பணிகளை Tangedco மேற்கொண்டு வருகிறது. இதற்காக மின் கணக்கீட்டாளர்களை தனியாக நியமித்து பணிகளை மேற்கொள்கிறது. இந்நிலையில் மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவைகளை தடுக்கும் நோக்கத்திற்காகவே, தற்போது டிஜிட்டல் மீட்டர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. கூடிய விரைவில் ஸ்மார்ட் மீட்டர்கள் பயன்பாட்டிற்கு வரும் என்கிறார்கள்..
ஸ்மார்ட் மீட்டர்: முதல்கட்டமாக இதன் சேவையும் ஆரம்பமாகிறது.. அதன்பிறகு மின் கணக்கீட்டாளர்கள் தேவையில்லை... ஸ்மார்ட் மீட்டரில் இருக்கும் சிம் கார்டு போன்ற அமைப்பால் குறிப்பிட்ட அளவிற்கு மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி பல்வேறு வசதிகளை மின்வாரியம் பொதுமக்களின் நன்மைக்காகவே வழங்கி வருகிறது.
எனினும், தமிழ்நாட்டில் சமீபகாலமாகவே, கூடுதலாக மின் கட்டணம் வந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இதற்கு காரணம், முதலில் ஒரு கட்டணமும், பிறகு சில நாட்கள் கழித்து கூடுதல் கட்டணமும் நிர்ணயிக்கப்படுவது நுகர்வோரிடையே பலவித கேள்விகளை எழுப்பிவருகிறது.. இதற்குதான், தற்போது, தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மின்சார வாரியம்: அதில், "தமிழக மின்சார வாரியம் புதிய மின் இணைப்பு வழங்கும்போது விண்ணப்பதாரர்களிடம் இருந்து பதிவு கட்டணம், வைப்புத் தொகை, வளர்ச்சி கட்டணம் என பல வகைகளில் கட்டணம் வசூலிக்கிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி வைப்புத்தொகை, தொழிற்சாலைகளுக்கு ஓராண்டுக்கு ஒரு முறையும் வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மாற்றம் செய்யப்படுகிறது.
கூடுதல் வைப்புநிதி: அதன்படி மின் இணைப்பு பெறும்போது குறிப்பிட்டிருந்ததை விட அதிக மின்சாரம் பயன்படுத்துவோரிடம் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படுகிறது. 2021ம் ஆண்டு தாழ்வழுத்த பிரிவில் அதிக மின்சாரம் பயன்படுத்திய வகையில் 36 லட்சம் வீடுகளில் 500 கோடி ரூபாய் கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்க திட்டமிடப்பட்டது. அது பல்வேறு கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.
அந்த திட்டம்தான் இப்போது மறுபடியும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவே பலருக்கு கூடுதல் மின் கட்டணம் வர காரணமாகும்.
இந்த அறிவிப்பு, மின்சாரம் வேண்டி விண்ணப்பிக்கும்போது தெரிவித்த மின் உபயோகத்தை காட்டிலும் கூடுதலாக உபயோகம் செய்வதற்கு மட்டுமே பொருந்தும். இந்த டெபாசிட் கட்டணம் கடைசி ஓராண்டில் பயன்படுத்திய மின்சார கட்டணத்தின் சராசரியை கணக்கிட்டு வசூலிக்கப்படும்" என்று மின்சார வாரியம் விளக்கம் தந்துள்ளது.
மின்கட்டணம்: அந்தவகையில், நேற்று முன்தினம் முதல் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கும் பணி துவங்கி இருக்கிறது. இந்த தொகை குறித்த விவரங்கள் மற்றும் இந்த மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணம் ரசீதில் குறிப்பிடப்படும் என்கிறார்கள். இதனிடையே, மின் கட்டணம் மறுபடியும் உயர்வதாக தகவல்கள் பரவி வருவது, பொதுமக்களை கவலைக்கு உள்ளாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications