மின்கட்டணம் உயர்கிறது.. திமுக ஆட்சியில் அதுக்குள்ளே? மீண்டும் கரண்ட்பில் உயர்வு.. இதுதான் காரணமா?
சென்னை: மின்கட்டணம் மறுபடியும் உயர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. அநேகமாக அடுத்த மாதம் முதல், கரண்ட் பில் உயர்வு குறித்த அறிவிப்பு வரலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.. இதற்கான காரணம் என்ன?
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அதில் உள்ளதாவது:

அன்புமணி கண்டனம்: தமிழ்நாட்டில் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதால், அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 10 மாதங்களில் மீண்டும் ஒரு மின்கட்டண உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.
மின்சாரக் கட்டண உயர் வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சொல்லிமாளாது. மின்சாரக் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அதே போல், விசைத்தறி உரிமையாளர்களும் மின் கட்டண உயர்வின் தாக்கங்களை தாங்க முடியாமல் தொழிலை விட்டு வெளி யேறிவிட்டனர். சிறு வணிகர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் பெரும்பகுதி மின் கட்டணம் செலுத்துவதற்கே செலவாகி விடுகிறது.
பொருளாதார நெருக்கடி: இத்தகைய சூழலில் மின்சாரக் கட்டணம் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டால், வணிகர்கள், சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் 90 சதவீத மக்களின் வருமானம் ஆண்டுக்கு 2 சதவீதம் கூட உயருவதில்லை. அப்படிப்பட்ட மக்களால் 4.70 சதவீத மின்கட்டண உயர்வை சமாளிக்க முடியாது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் 10 மாதங்களில் இரண்டாவது முறையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது இதுவரை நிகழ்ந்ததில்லை. எனவே, மின்சாரக் கட்டணத்தை ஜூலை மாதம் முதல் உயர்த்தும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
உண்மையிலேயே திமுக அரசு 2வது முறையாக கரண்ட் பில்லை உயர்த்தப்போகிறதா? அதற்கான தேவை என்ன வந்தது? இதுகுறித்து சில தகவல்களும் வட்டமிடுகின்றன.
தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி சுமையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு மின் வாரியம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் மின் கட்டணத்தை கடந்த வருடம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, மின் நுகர்வு மற்றும் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணங்களை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்து, கட்டண உயர்வுக்கு அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18-ம் தேதி மனுக்களை சமர்ப்பித்தது.

மின் கட்டணம்: ஆனால், மின் கட்டணத்தை உயர்த்த அரசியல் கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பின.. எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு. கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாததால், இப்போது கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று மின் வாரியம் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
இதற்கு பிறகு, வழக்கு விசாரணைகளும் நடந்த நிலையில் இறுதியில், மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க விதித்த தடையை மதுரை ஹைகோர்ட்டும் விலக்கியருந்தது. இதையடுத்து, மின் கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.
கரண்ட் பில்: புதிய மின் கட்டண உயர்வும் தமிழகத்தில் அமலானது.. வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதுடன், வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிப்பும் வெளியானது. அதுமட்டுமல்ல, ஆண்டுதோறும் ஜுலை 1-ம் தேதி 6 சதவீத மின் கட்டணத்தை உயர்த்தவும் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது..
கடந்த செப்டம்பரில்தான் கரண்ட் பில் கட்டணம் உயர்த்தப்பட்டது.. ஆனால், வருடா வருடம் ஜுலையில் மின்கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி தந்துள்ளதார், இந்த ஜூலை மாதம் கரண்ட் பில் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, 9 மாதங்களே ஆன நிலையில், ஜூலை 1 முதல் கூடுதலாக, 4.70 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
கட்டண உயர்வா: 2023 ஏப்ரல் மாத நிலவரப்படி, பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம், இரண்டில் எது குறைவோ, அந்த அளவு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் பணவீக்க விகிதம், 4.70 சதவீதமாக இருக்கிறது.. இது 6 சதவீத அளவுடன் ஒப்பிடும்போது குறைவுதான்.. அதனால், அடுத்த மாதம் முதல், அனைத்து பிரிவு கட்டணமும் 4.70 சதவீதம் உயர்த்தப்பட நிறையவே வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
அதாவது, இப்போதுள்ள யூனிட் கட்டணம் எவ்வளவோ, அதில் 4.70 சதவீதம் உயரக்கூடும் என தெரிகிறது. ஏற்கனவே உயர்த்திய மின் கட்டணத்தை செலுத்த முடியாமல், அவதியில் உள்ளபோது, இன்னொரு முறை மின்கட்டணத்தை உயர்த்திவிட்டால், பெரும் நெருக்கடியாகிவிடுமே என்று பொதுமக்கள் கலங்கி போயுள்ளனர்..
ஒரே வழி: மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் என்பது, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மட்டுமே உள்ளது. எனவே, அந்த ஆணையை நிறுத்தி வைக்குமாறு, ஆணையத்திடம் முதல்வர் வலியுறுத்தினால், இந்த மின்கட்டண உயர்வு இப்போதைக்கு வர வாய்ப்பில்லை என்கிறார்கள்.. எனினும், எதிர்க்கட்சிகள் இப்போதே கண்டனங்களை பதிவு செய்து வருவதால், திமுக அரசு என்ன செய்ய போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications