"லாஜிக்கே இல்லை.. எப்படி செட் ஆகும்?" அமித் ஷா கருத்திற்கு.. சுளீர் பதிலடி கொடுத்த அமைச்சர் பிடிஆர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்ற அமித் ஷாவின் கருத்திற்குத் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37வது கூட்டம் நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அஜய் குமார் மிஸ்ரா, நிசித் பிராமானிக் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தி

இந்தி

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித் ஷா, "பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை எளிமையாக மாற்றாத வரையில் அது பரப்பப்படாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவை கொடுக்க வேண்டியது அவசியம்.

 ஆங்கிலத்திற்கு மாற்று

ஆங்கிலத்திற்கு மாற்று

இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழி என்பது உள்ளூர் மொழிகளுக்கு மாற்று அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாகவே இந்தியை நாம் ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்.

 வடகிழக்கு மாநிலங்கள்

வடகிழக்கு மாநிலங்கள்

மேலும் வடகிழக்கு மாநிலங்களில் 22,00க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஒன்பது பழங்குடி சமூகங்கள் தங்கள் பேச்சுவழக்குகளை ஹிந்திக்கு மாற்றியுள்ளன. அங்குள்ள 8 மாநிலங்களும் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்க ஒப்புக்கொண்டன" என்று அவர் தெரிவித்தார்.

 கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

அமைச்சர் அமித் ஷாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் இதற்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளன. மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாகவும் அது ஒரு போதும் நிறைவேறாது என்றும் பலரும் சாடி வருகின்றனர்.

 லாஜிக்கே இல்லை

லாஜிக்கே இல்லை

இந்நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் அமித் ஷாவின் இந்தக் கருத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இப்போது எதற்காக மும்மொழி திட்டம். இதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை. மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்தில் லாஜிக்கே இல்லை.

 மொழி திணிப்பு மட்டும் இல்லை

மொழி திணிப்பு மட்டும் இல்லை

நாட்டில் உள்ள 60-70% மக்களுக்கு இந்தி தாய் மொழி இல்லை. நாட்டில் இந்தியைக் கட்டாயப்படுத்துவது என்பது வெறும் மொழி திணிப்பு மட்டும் கிடையாது. பொருளாதார ரீதியில் இது மாநிலங்களை பின் தள்ளும் ஒருசெயல்" என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+