'மண்புழு ஒரு இந்து..' என்ற ஜக்கி வாசுதேவை 'சம்பவம்' செய்த பிடிஆர்.. கேப்பில் சித்தார்த் வேற லெவல்
சென்னை: இந்து என்பது மதம் இல்லை ஒரு புவியியல் அடையாளம் என்ற ஜக்கி வாசுதேவ்வின் பழைய ட்வீட் ஒன்றுக்குக் கிண்டல் செய்யும் வகையில் பதிலளித்துள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ட்வீட் தான் இப்போது ட்விட்டர் டிரெண்டிங்கில் உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கோயில்கள் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஆனால், அரசின் கட்டுப்பாட்டில் கோயில்கள் இருக்கக் கூடாது என்பதை ஒரு சாரார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின், நிறுவனர் ஜக்கி வாசுதேவ்வும் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக, "கோவில்களைக் காப்போம்" என்ற கோஷத்தையும் சில ஆண்டுகளாக அவர் முன்னெடுத்து வருகிறார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
ஜக்கி வாசுதேவ்விற்கும் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் ஆரம்பம் முதலே ஏழாம் பொருத்தம் தான். அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் ஜக்கி வாசுதேவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆங்கில செய்தி நிறுவனதிதற்கு அளித்த பேட்டி ஒன்றில்கூட, ஜக்கி வாசுதேவை விளம்பர பிரியர் என்றும் கடவுள் மற்றும் மதத்தைப் பயன்படுத்தி அவர் காசு பார்ப்பதாகவும் விளாசித் தள்ளியிருந்தார்.

மீண்டும் பரபரப்பு
இருவருக்கும் இடையே உச்சக் கட்டத்திலிருந்த மோதல், சில வாரங்களாக இல்லாமல் இருந்தார். இரு தரப்பும் எந்த கருத்துகளையும் கூறாமல் இருந்தனர். இந்நிலையில், இந்து என்றால் யார் என்பது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் ஜக்கி வாசுதேவ் பதிவிட்ட ட்வீட்டிற்கு, விளக்கம் கொடுத்து மீண்டும் இணையத்தைப் பரபரப்பாக்கியுள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
|
பழைய ட்வீட்
கடந்த 2015ஆம் ஆண்டு ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர், "இந்து என்பது புவியியல் அடையாளம். யானை ஒன்று ஆப்பிரிக்காவில் இருந்தால், அது ஆப்பிரிக்கன். இங்கு நாம் நாட்டில் இருக்கும் மண்புழு ஒரு இந்து" எனப் பதிவிட்டுள்ளார். இதற்குத் தான் அமைச்சர் பிடிஆர் விளக்கம் கொடுக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.

பாடம் எடுத்த பிடிஆர்
இது குறித்து அமைச்சர் பிடிஆர் தனது ட்விட்ர் பக்கத்தில், "ஆப்பிரிக்கா ஒரு கண்டம்; இந்தியா ஒரு நாடு & குடியரசு (ஜக்கி வாசுதேவ் ட்வீட்டில் இந்த நிலம் இந்தியாவைக் குறிக்கிறது); இந்து என்பது மதம் & நம்பிக்கை. அதேநேரம் யானை முதுகெலும்பு உள்ள ஒரு பாலூட்டி; மண்புழு என்பது முதுகெலும்பில்லாது & நிலத்தில் வாழக்கூடியது. அதேபோல Charlatan என்பவர் உண்மையில் தனக்கு இல்லாத சிறப்பு அறிவை தனக்கு இருப்பதாகக் கூறிக் கொள்பவர்" எனப் பதிவிட்டுள்ளார்.

Multi-DIMENSION-al Charlatan
ஜக்கி வாசுதேவ்வின் பழைய ட்வீட்டை பகிர்ந்து இந்த விளக்கத்தை அளித்துள்ள அமைச்சர் பிடிஆர், அதில் Multi-DIMENSION-al Charlatan என்றும் ஜக்கி வாசுதேவை கிண்டல் செய்யும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.
|
நடிகர் சித்தார்த்
ஜக்கி வாசுதேவ்விற்கு பதில் அளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ள இந்த ட்வீட்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதை ரிட்வீட் செய்துள்ள நடிகர் சித்தார்த், ஜக்கி தாக்கப்பட்டார் என்று பதிவிட்டுள்ளார். ட்விட்டர் தளத்தில் தற்போது அமைச்சரின் ட்வீட்டும், சித்தார்த்தின் ரிட்வீட்டும் டிரெண்டிங்கில் உள்ளது.












Click it and Unblock the Notifications