எந்த துறையானாலும் சாதிக்கும் சைலேந்திர பாபு.. தீயணைப்பு துறையிலும் ஒரு சாதனை #TheeApp
சென்னை: தீவிபத்து உள்ளிட்ட ஆபத்துகளிலிருந்து உடனடியாக உதவும் வகையில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை சார்பில் தீ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் இயக்குநர் சைலேந்திர பாபு கூறுகையில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை மற்றும் மீட்புத் துறையின் சார்பில் தீ (Thee) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளோம். இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இதை அனைவரும் டவுன்லோடு செய்து வைத்துக் கொண்டால் தீவிபத்து ஏற்படும் சமயத்தில் உதவி செய்ய ஏதுவாக இருக்கும். தீவிபத்து என்றில்லை எந்தவிதமான ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவதற்கு உதவும்.

கட்டுப்பாட்டு மையம்
இல்லாவிட்டால் நீங்கள் யாராவது விபத்தில் சிக்கியிருப்பவர்களை காப்பாற்ற விரும்புகிறீர்கள். அப்போது இந்த செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலியில் உதவி அல்லது ஹெல்ப் என்ற பட்டனை அழுத்தினால், உடனடியாக சென்னையில் இருக்கும் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் வந்துவிடும்.

பதற்றமான சூழல்
நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்திலிருந்து ஹெல்ப் பட்டனை பிரஸ் செய்தால் ஜிபிஎஸ் கருவி மூலமாக உங்களது முகவரி, போன் நம்பர் , பெயர் ஆகியவை எங்களது கட்டுப்பாட்டு அறைக்கு வந்துவிடும். தீவிபத்து உள்ளிட்ட ஆபத்தான சூழலில் பொதுமக்கள் பதற்றமான சூழலில் இருப்பார்கள்.
ஜிபிஎஸ் முகவரி
அந்த சமயத்தில் அவர்களால் முகவரியை சரியாக சொல்ல முடியாது. இல்லாவிட்டால் இந்த செயலி மூலம் உதவிக்கு அழைப்பவருக்கு அந்த இடம் புதிதாக இருக்கலாம், அவரால் அட்ரஸை சரியாக சொல்ல இயலாது. இது போன்ற பிரச்சினையை தீர்க்கவே ஜிபிஎஸ் மூலம் முகவரியை டிராக் செய்துவிடுவோம்.

கட்டுப்பாட்டு அறை
தமிழ்நாட்டில் எந்த ஊரில் , எந்த மாவட்டத்தில், எந்த தெருவில், எந்த வீட்டிலிருந்து நீங்கள் அழைத்துள்ளீர்கள் என்பது அந்த செயலி மூலம் எங்களுக்கு தெரிந்துவிடும். நீங்கள் எங்கிருந்து அழைத்தீர்களோ அந்த இடத்திற்கு அருகில் உள்ள தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே சம்பவ இடத்திற்கு வீரர்கள் விரைந்து செல்வர். தொடர்ந்து உங்கள் தொலைபேசிக்கு எங்கள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து செய்தி வந்துக் கொண்டே இருக்கும்.

செயலி
காவலன் என்ற செயலியை வெளியிட்டிருந்தோம். இதன் மூலம் பெண்களுக்கு ஏதாவது ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அவர்கள் இருக்கும் இடத்திற்கே காவலர்கள் வந்துவிடுவார்கள். காவல்துறையில் காவலன் போல் தீ என்கிற ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications