களத்தில் 1 லட்சம் பேர்.. தமிழகத்தில் நாளை நடக்கும் வாக்குப்பதிவு.. கடைசிகட்ட தேர்தல் பணிகள் தீவிரம்!
சென்னை: தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது.காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடக்க உள்ளது.
தமிழகத்தில் ஒரு வழியாக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் நேற்று முடிவிற்கு வந்தது. கடந்த ஒரு மாதமாக தீவிரமாக பிரச்சாரம் நடந்த நிலையில் நேற்று மாலை 7 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. பிரச்சாரம் முடிந்த நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

நாளை நடக்க உள்ள தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுக்க உள்ள வாக்குசாவடிகளுக்கு தேர்தல் பணியாளர்கள் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். சிறப்பு பேருந்துகளில் வாக்குசாவடிகளை நோக்கி தேர்தல் பணியாளர்கள் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் தேர்தல் பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுக்க மத்திய பாதுகாப்பு படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .
தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை போலீசார் 74,162 பேரும், துணை ராணுவத்தினர் 23,200 பேரும் களத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்ப்ட்டு வருகிறார்கள். மொத்தமாக 1,05,372 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது போக தமிழக சிறப்பு காவல்படையினர், ஊர்க்காவல்படை, தீயணைப்புத் துறையினரும் தேர்தல் பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர். கொரோனா காலம் என்பதால் அதற்கு ஏற்றபடி தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகள் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகளும் நாளை செய்யப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications