Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேட்டை தடுப்பு காவலர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.12,500ஆக இருந்த வேட்டை தடுப்பு காவலர்களின் ஊதியம், இனி ரூ.15,625 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 669 வேட்டை தடுப்பு காவலர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, ஆனைமலை, முதுமலை, விருதுநகர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் வேட்டை தடுப்பு காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காடுகளையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். இந்த வேட்டை தடுப்பு காவலர் பணியில் பெரும்பாலும் பழங்குடி இளைஞர்கள் தான் பணியாற்றி வருகின்றனர்.

anti poaching watchers salary forest department

10 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றினால், இவர்களுக்கு காப்பாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பழங்குடி இளைஞர்களுக்கு அரசுப் பணி கிடைத்து வந்தது. கடந்த ஆண்டு வேட்டை தடுப்பு காவலர் பணியை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பணியில் இருந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை வேட்டை தடுப்பு காவலர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு ரூ.12,500 ஊதியமாக அளிக்கப்பட்டு வந்தது. இனி வேட்டை தடுப்பு காவலர்களுக்கான ஊதியமாக ரூ.15,625ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக 669 வேட்டை தடுப்பு காவலர்கள் பயன்பெறுவார்கள்.

இந்த அறிவிப்பு அப்பணியில் ஈடுபட்டு வருபவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அவர்கள் தரப்பில் ரூ. 19,525ஆக ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. அதேபோல் ரோந்து பணி, கண்காணிப்பாளர், சந்தன மர பாதுகாவலர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவோருக்கு தினசரி ரூ.311ஆக அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+