சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குவாரண்டைன் விதிகளில் மாற்றம்.. இ-பாஸ் விதிகளில் மேலும் தளர்வுகள்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் இ-பாஸ் விதிகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இ.பாஸ் விதிகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்துறை சார்ந்த பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக இ-பாஸ் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஒரு பக்கம் இ பாஸ் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. யார் விண்ணப்பித்தாலும் இ பாஸ் கிடைக்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் சொந்த ஊருக்கும், பணியிடங்களுக்கும் செல்ல வசதியாக இ பாஸ் விதிகள் மாற்றப்பட்டு இருக்கிறது.

Tamilnadu government changed E Pass rules and Quarantine rules too

இ பாஸ் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. இ பாஸ் இருந்தால் மட்டுமே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை,மக்களின் இடமாற்றத்தை கண்டுபிடிக்க முடியும். இதற்காக மட்டுமே இ பாஸ் தொடர்ந்து அமலில் உள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார் .

இந்த நிலையில் தமிழகத்தில் இ - பாஸ் விதிகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிற மாநிலங்களில் இருந்து வணிக ரீதியாக தமிழகம் வருவோருக்கு உடனடி இ - பாஸ் வழங்கப்படும். தமிழகம் வந்து 72 மணி நேரத்திற்குள் திரும்புவோருக்கு குவாரண்டைன் கிடையாது.

மீண்டும் திறக்கப்படுகிறது கோயம்பேடு மார்க்கெட்.. செப். 28ம் தேதி முதல் செயல்படும்.. அதிரடி முடிவு! மீண்டும் திறக்கப்படுகிறது கோயம்பேடு மார்க்கெட்.. செப். 28ம் தேதி முதல் செயல்படும்.. அதிரடி முடிவு!

இவர்கள் இ பாஸ் இல்லாமல் தமிழகம் வரலாம். 3 நாட்கள் தங்கலாம். 3 நாட்களுக்குள் திரும்பி சென்றார்கள் என்றால் அவர்களுக்கு குவாரண்டைன் தேவையில்லை. அதேபோல் திரைத்துறையினர், சட்டப் பணி, தொழில்துறையினர், ஐ.டி ஊழியர்கள் உள்ளிட்ட தொழிற்சார்ந்த பணிகளுக்கு வருவோருக்கும் குவாரன்டைன் கிடையாது.

Recommended Video

    August 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-Pass- முதல்வர் அதிரடி | OneindiaTamil

    இதனால் சென்னைக்கு பலர் படையெடுக்க வாய்ப்புள்ளது.தொழிற்துறை சார்ந்த பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக இ-பாஸ் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu government changed E Pass rules and Quarantine rules too to ease down the economic activity.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X