அங்கன்வாடி பணியாளர்களுக்கும் 15 நாட்கள் கோடை விடுமுறை.. அப்போ குழந்தைகளுக்கு சத்தான சாப்பாடு?
சென்னை: அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்களில் 25 லட்சம் குழந்தைகள் படிக்கிறார்கள். இவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தில் ஸ்னாக்ஸும், மாநில அரசு திட்டத்தில் மதிய உணவும் வழங்கப்படுகின்றன.

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகின்றன. ஆனால் அங்கன்வாடி மையங்களுக்கு அவ்வாறு விடுமுறை விடப்படுவதில்லை. இந்த நிலையில் கோடை விடுமுறை தங்களுக்கும் வழங்க வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மே 10 ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி முடிய 15 நாட்களுக்கு அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட ஆணையில் அங்கன்வாடிப் பணிகளின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களான முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாவது வாரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மூன்றாம் வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு நான்காவது வாரமும் கோடை விடுமுறை வழங்கியும் அவ்வாறு அங்கன்வாடி மையங்களில் கோடை விடுமுறை வழங்கப்படும்.
மே மாதம் இரண்டாவது வாரம் அங்கன்வாடி உதவியாளர்களும் மூன்றாவது வாரம் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களும் நான்காவது வாரம் அருகிலுள்ள குறு அங்கன்வாடி மையங்களில் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களும் உணவூட்டும் பணிகளை எவ்விதமான இடையூறுமின்றி நிறைவேற்றும்படியும், அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மே மாதத்தில் விடுமுறை வழங்கும்போது உணவூட்டும் பணிகளை மாற்று ஏற்பாட்டுடன் மேற்கொள்ளும் போது அங்கன்வாடி மையங்கள் ,அரசின் கொள்கை முடிவின்படி வருடம்தோறும் இயங்குவதை உறுதிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.
மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநரின் கடிதங்களில் குழந்தைகள் மையங்கள் வழக்கமாக செயல்படும் நாட்களில் முன்பருவக் கல்வி மூலம் பயன்பெறும் 2 வயது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 இல் வரையறுக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கான 500 கிலோ கலோரி மற்றும் 12 கிராம் புரதச் சத்தை ஆண்டில் 300 நாட்களுக்கு வழங்கும் வகையில் 50 கிராம் சத்துமாவு, சமைத்த உணவு முட்டை, பயறு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்குவதன் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநரின் கடிதங்களில் தற்போது அங்கன்வாடிப் பணியாளர்களின் தொடர் கோரிக்கையையும் அதிக கோடை வெப்பத் தாக்கத்தை குழந்தைகளால் தாங்கிக் கொள்ள இயலாத சூழ்நிலையில் மே மாதம் 15 நாட்கள் குழந்தைகள் மையங்களுக்கு விடுமுறை அளிக்கும் வகையில் மேற்சொன்ன அனைத்து உணவுகளையும் மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு வழங்க இயலாது என்பதாலும் சமைத்த உணவிற்கு பதிலாக உலர் உணவு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கக் கூடாது என மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாலும் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் பயன்படுத்த தயாராக உள்ள உணவு, ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் இதர சுகாதார கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும் கோடை விடுமுறை வழங்கப்படவுள்ள நாட்களுக்கு மேற்கொண்டுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊட்டச்சத்தை முற்றிலுமாக தவிர்ப்பதை விட தற்போது அவர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவினையே வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வரையில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் மே மாதம் 15 நாட்கள் குழந்தைகள் மையங்களுக்கு விடுமுறை வழங்கவும், மேற்கண்ட காலங்களுக்கு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கவும், மத்தி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பயனாளிகளுக்கு உலர் உணவு வழங்க வழிவகை இல்லை என்பதால் 2 முதல் 6 வயதுக்குள்பட்ட முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவியை 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு 750 கிராம் சத்துமாவை வீட்டுற்கு எடுத்து சென்று பயன்படுத்தும் வகையில் மேமாதம் 9ஆம் தேதி பயனாளிகளுக்கு வழங்க அனுமதிக்க வேண்டியும் இயக்குநர் மற்றும் குழும இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் தனது கடிதங்களில் கேட்டு் கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications