குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க.. சென்னையில் நாளை குறைதீர் முகாம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை?
சென்னை: சென்னையில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்க்க, நீக்க குறைதீர் முகாம் நாளை காலை 10 மணி முதல் பகல் 1 வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஆணையாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "மே 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (மே 13) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.
மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை, பான் அட்டையை போல் ரேஷன் கார்டுகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. தற்போது மத்திய அரசு செயல்படுத்தியுள்ள ஒரே நாடு ஒரே அட்டை முறை வந்த பிறகு இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த டிஜிட்டல் கால கட்டத்தில் எல்லாராலும் ஆன்லைனில் இவற்றை மாற்றிக் கொள்ள தெரியாது. அதனால்தான் அரசு சார்பில் இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஆன்லைனில் மாற்றுவதற்கு பதிவேற்றம் செய்ய ஆதார் கார்டு, பேங்க பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, இபி பில் அல்லது தண்ணீர் வரி பில், லேண்டுலைன் தொலைபேசி பில், வருமான சாற்று, ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் ஆகியவை ஆகும்.
இவற்றை ரெடியாக வைத்திருந்துவிட்டு https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்று இருக்கும். அதில் உறுப்பினர் பெயர் சேர்க்க அல்லது நீக்க என சேவைகளுக்கான ஆப்சன் இருக்கும். அதில் உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்து, பின்னர் உங்களது ரேஷன் அட்டையில் கொடுத்த மொபைல் நம்பரை கொடுத்து, கேப்ட்சா குறியீட்டினை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். அதை டைப் செய்தால் மற்றொரு பக்கத்திற்கு செல்லும். அதில் ஏற்கெனவே உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வரும். அந்த விவரங்களுக்கு கீழ் குடும்ப உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்து அதில் பெயர், பாலினம், பிறந்த தேதி, உறவு முறை போன்றவற்றை சேர்க்க வேண்டும். இவற்றை கொடுத்து உறுதிப்படுத்துதல் வேண்டும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications