Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

23 ஆண்டு பழமை! சென்னையில் இரு முக்கிய மேம்பாலங்களை இடிக்க முடிவு? அப்போ போக்குவரத்து என்னவாகும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் முக்கிய இரு மேம்பாலங்கள் இடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையில் விமான நிலையம்- விம்கோ நகர், சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை ஆகிய இரு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Tamilnadu government is planning to demolish 2 flyovers in Chennai?

இந்த மெட்ரோ ரயில்களுக்கு பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து ரூ 63,246 கோடியில் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணி நடைபெறுகிறது.

இதில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26 கிலோமீட்டர் தொலைவுக்கும் மாதவரம்- சிறுச்சேரி சிப்காட் வரை 45 கி.மீ. வரைக்கும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்திற்கும் என 118 கி.மீ தூரத்திற்கு புதிய வழித்தடங்கள் அமையவுள்ளன.

இதில் உயர்மட்ட பாதை, சுரங்கப்பாதையில் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன. இதில் 3 நிலையங்கள் மிகத் தாழ்வாக அமைக்கப்பட உள்ளது.
மாதவரம் - சிறுச்சேரி வழித்தடத்தில் கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை மற்றும் பாரதிதாசன் சாலையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மிக குறுகிய இடத்தில் அமைக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையங்கள் குறுகியதாகவும், ஆழத்திலும் அமைய உள்ளது. இந்த 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் மெட்ரோ ரயில் நிலையம் தான் இருப்பதிலேயே தரை மட்டத்தில் இருந்து மிகவும் ஆழத்தில் அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2026ம் ஆண்டில் பணிகள் முடிந்து பொதுமக்கள் விரைவு சேவைக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிறுச்சேரியிலிருந்து மாதவரம் வரை செல்லும் மெட்ரோ ரயிலின் 3ஆவது வழித்தட பணிகளுக்காக சென்னையில் இரு முக்கிய மேம்பாலங்கள் இடிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை 2000 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அடையாறு எல்பி சாலை மேம்பாலம், ராயப்பேட்டை -மயிலாப்பூர் மேம்பாலம் ஆகியவை ஆகும்.

மேம்பாலங்களை இடிக்காமல் மாற்று இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்க இயலாது என்பதால் இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாலங்களை இடிப்பதால் போக்குவரத்துக்கு தடையில்லாத வகையில் மேம்பாலங்களுக்கு அருகே தற்காலிகமாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு இலகுரக வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படும்.

இந்த மேம்பாலங்களை இடிக்க சென்னை போக்குவரத்து காவல் துறை மற்றும் மாநகராட்சியிடம் எல் அன்ட் டி நிறுவனம் அனுமதி பெற்றுவிட்டதாக தெரிகிறது. எனவே ஒரு சில மாதங்களில் பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கும் என தெரிகிறது. மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்ட பின் மீண்டும் அதே இடத்தில் மேம்பாலங்களை எல் அன்ட் டி நிறுவனம் கட்டித் தரும் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+