Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஏகப்பட்ட சலுகைகள்!" மின்சார வாகன துறையில் டாப் இடத்திற்கு செல்லும் தமிழ்நாடு! புதிய பாலிசி வெளியீடு

தமிழ்நாடு அரசு தனது புதிய திருத்தப்பட்ட மின்சார வாகனக் கொள்கையை வெளியிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு திருத்தப்பட்ட புதிய மின்சார வாகனக் கொள்கை 2023 என்ற பெயரில் புதிய திருத்திய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. மின் வாகன உற்பத்தித் துறையில் 50 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

பெட்ரோல், டீசல் விலை சில மாதங்களாக இந்தியாவில் மாறவில்லை என்றாலும் கூட, நீண்ட கால நோக்கில் பார்த்தால் அவை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பெட்ரோல் விலை 100 தாண்டிவிட்ட நிலையில் மீண்டும் அது ரூ.100க்கு கீழ் குறைவது சந்தேகமே.

இதனால் வணிக வாகனங்களை மட்டுமின்றி, நடுத்தர வர்க்கத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காலத்தில் கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்கள் கணிசமான தொகையை எரிபொருளுக்கு ஒதுக்க வேண்டி உள்ளது.

 மின்சார வாகனங்கள்

மின்சார வாகனங்கள்

இத்துடன் சேர்ந்த பருவநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் பிரச்சினைகளும் பெட்ரோல், டீசல் பயன்பட்டால் ஏற்படுகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் மின்சார வாகனங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளன.. உலகின் பல நாடுகளும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் 2035க்கு பிறகு முற்றிலும் மின்சார கார்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கவும் முடிவெடுத்துள்ளன. இதனால் வரும் காலங்களில் நிச்சயம் மின்சார வாகனங்களே எதிர்காலமாக மாறும். உலகின் மற்ற நாடுகளும் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருகிறது.

 தமிழ்நாடு புதிய பாலிசி

தமிழ்நாடு புதிய பாலிசி

இந்தியாவில் பார்க்கும் போது, மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு டாப் இடத்தில் இருக்கிறது. இந்த நிலையை மேலும் மேம்படுத்தவும் மாறி வரும் காலச் சூழலுக்கு ஏற்ப சவால்களை சமாளிக்கவும் தமிழ்நாடு திருத்தப்பட்ட புதிய மின்சார வாகனக் கொள்கை 2023 என்ற பெயரில் புதிய திருத்திய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. மின் வாகன உற்பத்தித் துறையில் 50 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதற்காகத் தலைமைச் செயலாளர் தலைமையில் தனிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

 மானியங்கள்

மானியங்கள்

மூலதன மானியம், மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) திரும்பப் பெறுதல், விற்றுமுதல் அடிப்படையிலான மானியம், மேம்பட்ட செல் மானியம் எனப் பல விரிவான விஷயங்களைக் கொண்டு இந்த கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மற்றும் வணிகப் போக்குவரத்தை மின் மயமாக்குதல், மின்சார வாகன நகரங்களை உருவாக்குதல் ஆகியவை தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023இன் முக்கிய அம்சங்களாகும். வரும் காலத்தில் இது தமிழ்நாட்டை மின்சார வாகன துறையில் முன்னிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

 4 நகரங்கள்

4 நகரங்கள்

மேலும், முதற்கட்டமாகச் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களை இ-மொபிலிட்டி எனப்படும் மின்சார வாகன நகரங்களாக மேம்படுத்தத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. மின்சார வாகனங்கள் மட்டுமின்றி, ஹைபிரிட் வாகனங்களையும் இதில் சேர்த்துள்ளனர். இதன் மூலம் ஹைபிரிட் வாகனங்களை உற்பத்தி செய்வோருக்கும் இதன் சலுகைகள் கிடைக்கும். இதுவரை தமிழ்நாடு அரசு மின்சார வாகனச் சந்தையில் 24 ஆயிரம் கோடி மதிப்பில் 48 ஆயிரம் பேருக்கு வேலையாக்கும் வகையிலான ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டுள்ளது

 வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

சமீபத்தில் புகழ்பெற்ற நிஸான் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த புதிய கொள்கையின்படி, மின்சார வாகன திட்டங்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியத்தில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு மின்சார வரியில் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படும். வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் ஒரு பகுதியாக, மின்வாரிய திட்டங்களுக்கு பணியாளர்களின் ஓய்வூதிய பங்களிப்பில் நிறுவனம் செலுத்தும் தொகையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.. தமிழ்நாட்டில் வசிக்கும் ஊழியர்களுக்கு அதிகபட்சம் ரூ. 48,000 வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

 சார்ஜிங் உள்கட்டமைப்பு

சார்ஜிங் உள்கட்டமைப்பு

மற்ற நிறுவனங்கள் மின்சார வாகன துறையில் நுழைய விரும்பினால், அதற்கும் நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்சார வாகனங்களுக்கான சாலை வரி, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதிக் கட்டணங்களை ரத்து செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. இது மட்டுமின்றி, புதிய கொள்கையின்படி, நகரங்களில் உள்ள அனைத்து புதிய கட்டுமானங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சார்ஜிங் உள்கட்டமைப்பு உடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கட்டுமான சட்டங்களில் திருத்தங்கள் செய்யலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

 சலுகை

சலுகை

மேலும் பேட்டரி திறன் மற்றும் வாகன வகையின் அடிப்படையில், வணிக வாகனங்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10 லட்சம் வரையிலான சலுகைகளையும் தமிழக அரசு வழங்கும். புதிய மின்சார வாகன கொள்கையின்படி, தமிழ்நாடு அரசு பொது சார்ஜிங் நிலையங்களுக்கான மின் கட்டணத்தை மாற்றியமைக்கும்.. சார்ஜிங் மற்றும் பேட்டரி மாற்றும் நிலையங்களுக்கு சலுகைகளை வழங்கும். மேலும் பெட்ரோல் வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு மாறுவோருக்குத் தேவையான ஊக்கத்தொகைகளையும் தமிழக அரசு அளிக்கும்.

 அரசு முடிவு

அரசு முடிவு

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 30% பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்றவும் அரசு முடிவு செய்துள்ளது. பஸ்களை சார்ஜ் செய்யத் தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவுள்ளது. சார்ஜிங் பொறுத்தவரைத் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் 25 கிமீ இடைவெளியில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும். சார்ஜிங் நிலையங்களுக்குக் கட்டண சலுகைகளையும் இந்தக் கொள்கை வழங்குகிறது. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு 75% மற்றும் அதன்பின் இரண்டு ஆண்டுகளுக்கு 50% சலுகை வழங்கப்படுகிறது.

 சார்ஜிங்

சார்ஜிங்

மேலும், பீக் ஹவர்கள் அல்லாத நேரங்களில் சார்ஜ் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை 50% கட்டணத்தைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.. மேலும், மாநிலத்தில் 200 ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், 500 ஸ்லோ சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் அரசு சலுகைகளை வழங்கும். இது தவிர 50 அக்ரிகேட்டர் சார்ஜிங் நிலையங்கள் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகைக்குத் தகுதி பெறும்.. 200 பொது பேட்டரி மாற்றும் நிலையங்கள் ரூ.2 லட்சம் வரை ஊக்கத்தொகையைப் பெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+