Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

12 மணி நேர வேலை! கூட்டணிக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பு! தொழிற்சங்கங்கள் உடன் ஆலோசனை நடத்தும் தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள 12 மணி நேரம் வேலை மசோதா பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது.

தமிழ்நாடு சட்டசபை கூட்டம் இப்போது நடந்து வரும் நிலையில், நேற்றைய தினம் முக்கியமான ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதாவது இப்போது வேலை நேரம் 8 மணி நேரமாகவே இருக்கிறது. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்று வாரத்திற்கு 48 மணி நேரம் என்று உள்ளது.

Tamilnadu govt is having meeting with trade unions on 12 hour work law

இதை மாற்றி தினசரி வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவது குறித்த மசோதா தான் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

12 மணி நேர வேலை மசோதா: இருப்பினும், சில தனியார் ஐடி நிறுவனங்கள் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை மற்றும் 3 நாட்கள் விடுப்பு வழங்க இருப்பதாகவும் இதற்காகவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. மேலும், இது விருப்பப்படும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஒரு வாரத்திற்கான வேலை நேரம் 48 மணி நேரமாகவே தொடரும் என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.

இருப்பினும், இதற்குச் சட்டசபைக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபைக்கு வெளியேயும் பலரும் இதைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இணையத்திலும் கூட பலரும் இந்த மசோதாவை விமர்சித்தே வருகின்றனர்.

இந்தச் சூழலில் இது குறித்து தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த வெள்ளிக்கிழமை (21-4-2023) அன்று தமிழகச் சட்டமன்றத்தில் "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)" தாக்கல் செய்யப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்: இந்த சட்டமுன்வடிவினுடைய முக்கிய அம்சங்கள் குறித்தும், மத்திய அரசின் தொழிலாளர் நலச் சட்டத்திலிருந்த தற்போது தமிழக அரசு முன்மொழிந்திருக்கும் இந்தச் சட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை விளக்கிக் கூறி, இந்தத் திருத்தத்தால் தமிழகத்திற்குக் கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும், சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் விரிவாக விளக்கம் அளித்தார்கள். இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.

இதனால் வரும் 24-4-2023 (திங்கள்கிழமை) அன்று மதியம் 3-00 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+