இனி நோ ஆன்லைன் கிளாஸ்..வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள்.. தேர்வு குறித்தும் அரசு முக்கிய உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் உயர் கல்வி நிறுவனங்கள் (Higher education institutions) இனி வாரத்தில் ஆறு நாட்கள் மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகளை நடத்த வேண்டும் என உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது.

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டன. அப்போதும் சுழற்சிமுறையில் 50 விழுக்காடு மாணவர்களுடன் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனிடையே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேக்சின் பணிகளால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கிலும் கூட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்தச் சூழலில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் உள்ளதால், இனி சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள உத்தரவில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்,தனியார் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகளைக் கட்டாயம் நடத்த வண்டும்.
இந்த பருவத்திற்கான செமஸ்டர் தேர்வுகள் நேரடி தேர்வுகளாக ஜனவரி 20க்கு பிறகு நடத்தப்பட வேண்டும். மாணவர்களுக்குப் பாடங்களை நினைவூட்டி உரியப் பாடத் திட்டங்களை வழங்கிட வேண்டும். மேலும், மாணவர்களுக்குப் பயிற்சி தேர்வுகளையும் நடத்திட வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி வகுப்புகளை நடத்திட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications