தமிழக கட்சிகளுக்கு ஹேப்பி நியூஸ்... டிசம்பர் 19 முதல் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்தி கொள்ளலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உளளார்.

Recommended Video

    சென்னை: டிச.19 முதல் அரசியல், மதக்கூட்டங்கள் அனுமதி: கண்டிஷன்களுடன் அனுமதித்த எடப்பாடி!

    இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில அரசியல் கட்சிகள் பிரசாரத்தை துவக்கி உள்ளன. தற்போது அரசியல் கூட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Tamilnadu govt Permission for open political meetings from 19th december

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    தமிழகத்தில் அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    ஏற்கனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, திறந்தவெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 19.12.2020 முதல் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

    இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.அரசு எடுத்து வரும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக சில அரசியல் கட்சிகள் பிரசாரத்தை துவக்கி உள்ளன. தற்போது அரசியல் கூட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் விரைவில் சூடுபிடிக்க தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+