Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு அரசு சார்பாக நாளை 'தமிழ்நாடு நாள்' கொண்டாட்டம்- கருத்தரங்கம், கண்காட்சிகளுக்கு ஏற்பாடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு நாள் கொண்டாட்டங்கள் நாளை நடைபெற உள்ளன. இதனையொட்டி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

சென்னை மாகாணம்- மதராஸ் மாகாணம்- மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்ட இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் ஜூலை 18 (1967). ஆகையால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாளை தமிழ்நாடு நாள் என கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

 Tamilnadu Govt to observe Tamil Nadu Day tomorrow

இதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் சார்பில் "தமிழ்நாடுநாள்" விழா நாளை (18.7.2022)சென்னை கலைவாணர் அரங்கில்காலை 11 .30 மணி அளவில் எழுச்சியோடு நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் , விழா பேருரைநிகழ்த்துகிறார். இது குறித்து வெளியான அரசின்செய்திக் குறிப்பு வருமாறு :-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு நாள்' விழாநாளை (ஜூலை 18-ஆம் நாள்) காலை 11.30மணியளவில் சிறப்பாக நடைபெறவுள்ளது.இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுவிழாப்பேருரையாற்றவுள்ளார். தமிழ்நாடு நாள் விழாவில், கருத்தரங்கம்,செய்திமக்கள் தொடர்புத் துறையின் சார்பாககுறும் படம் திரையிடல் மற்றும் விழா சிறப்புமலர் வெளியிடப்படுகின்றது.

முன்னதாக, இவ்விழாவில் காலை 9.00மணியளவில் மாநிலத் திட்டக்குழு, துணைத்தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன்தலைமையில், கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்தக் கருத்தரங்கில்,

சமூக நீதிகண்காணிப்பு (ம) பாதுகாப்புக் குழுத்தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தமிழ்நாடு உருவான வரலாறு"
ஆழிசெந்தில்நாதன் மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும்"
வாலாசா வல்லவன் தமிழகத்துக்காக உயிர்கொடுத்த தியாகிகள்"
முனைவர்ம.இராசேந்திரன் தாய் நாட்டுக்குப் பெயர்சூட்டிய தனயன்"
சட்டமன்ற உறுப்பினர்மருத்துவர் நா.எழிலன் "முத்தமிழறிஞர்கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு"

ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றுகிறார்கள்.

இவ்விழாவினை முன்னிட்டு மாநிலஅளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டி,கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டிஆகியவற்றில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும்கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப்பரிசுகள் வழங்கப்படும்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்

இலக்கிய மாமணி விருது 2021
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது-2021
கபிலர்விருது-2021
உ.வே.சா. விருது - 2021
அம்மா இலக்கிய விருது-2021
காரைக்கால் அம்மையார் விருது - 2021 ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

2021-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருது பெறும் கு.சின்னப்ப பாரதி (சார்பாக அவரதுகுடும்பத்தினர்), கோணங்கி, இரா.கலியபெருமாள் ஆகியோர்களுக்கு விருதுத்தொகையாக ரூபாய் 5இலட்சத்திற்கான காசோலையும், தங்கப் பதக்கமும் தகுதியுரையும்வழங்கி பொன்னாடை அணிவித்து முதலமைச்சரால் சிறப்பிக்கப்படவுள்ளனர்.

2021ஆம் ஆண்டிற்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதுபெறும் கயல் (கோ) தினகரன்,கபிலர் விருது பெறும் பாவலர் கருமலைத் தமிழாழன் (எ) கி.நரேந்திரன், உ.வே.சா விருது பெறும்மருத்துவர் இரா. கலைக்கோவன்,அம்மா இலக்கிய விருது பெறும் முனைவர் மு.சற்குணவதி,காரைக்கால் அம்மையார் விருது பெறும் முனைவர் இரா. திலகவதி சண்முகசுந்தரம் ஆகியோருக்கு இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் தங்கப்பதக்கமும்,தகுதியுரையும் வழங்கி பொன்னாடையும் அணிவித்து முதலமைச்சரால் சிறப்பு செய்யப்படவுள்ளனர்.

தமிழ்நாடுநாள் விழாவைமுன்னிட்டு மாநில அளவில் நடத்தப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கானகட்டுரைப் போட்டியில் முதல் பரிசுரூ.50,000/- பெற்ற சிவகங்கைமாவட்டத்தைச் சேர்ந்த செல்வி பா.தயாழினி, இரண்டாம் பரிசுரூ.30,000/- பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி சொ.துர்கா, மூன்றாம் பரிசுரூ.20,000/- பெற்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி தி.யோக பிரியா, பேச்சுப் போட்டியில் முதல் பரிசு ரூ.50,000/- பெற்றதிருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தசெல்வி சு. நறுமுகை, இரண்டாம்பரிசு ரூ.30,000/- பெற்ற சிவகங்கைமாவட்டத்தைச் சேர்ந்த செல்வன்இர. பிரபாகரன், மூன்றாம் பரிசுரூ.20,000/- பெற்ற கடலூர்மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி செ.ஸ்ருதிகா ஆகியோருக்கு காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் முதலமைச்சரால் வழங்கப்படும்.

தொழில்கள், தமிழ் ஆட்சி மொழிமற்றும்தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறைஅமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையுரையும், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையுரையும் ஆற்றவுள்ளார்கள். தொல்லியல் துறை சார்பாக அமைக்கப்படும் தொல்பொருட்கள் கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில்நடைபெற்ற அகழாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

மேலும், தமிழ்நாடு நில அளவைத் துறை சார்பில் சென்னைமாகாணத்தின் பழைய மற்றும் தற்போதுவரையிலான ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின்சார்பாக, தமிழ்நாடு நாள் வரலாறு குறித்தும்,தமிழ்நாடு நாள் சட்டமன்ற தனித் தீர்மான ம்குறித்தும் பல்வேறு அறிஞர் பெருமக்கள்வழங்கிய கருத்துரைகளை உள்ளடக்கிய நூல் சிறப்பு மலராக வெளியிடப்படுகிறது.

இந்நிகழ்ச்சியினையொட்டி, சென்னைகாமராஜர் சாலை மெரினா கடற்கரையில் ஒடிசாவைச் சேர்ந்த புகழ்மிக்க மணற் சிற்பக்கலைஞர் பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக்அவர்களால் தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பமும் உருவாக்கப்படுகிறது. மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் சிறப்பு மணற் சிற்பம் மற்றும் கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காட்சியினை பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் கண்டுகளிக்கும் வகையில் 18.07.2022 முதல் 20.07.2022வரை மூன்று நாட்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+