மெல்ல குறைந்தது கொரோனா.. தமிழகத்தில் இன்று 447 பேருக்கு பாதிப்பு.. சென்னையில் 363
சென்னை: இன்று தமிழகத்தில் கொரோனாவால், 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 194 பேர் பெண்கள்.
Recommended Video
இதுகுறித்து இன்று மாலை நிருபர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது: இந்தியாவிலேயே அதிகபட்சமாக 58 பரிசோதனை மையங்கள் இருப்பது தமிழகத்தில் தான். இதில் 30 பரிசோதனை மையங்கள் அரசுடையது. 20 தனியார் ஆய்வகங்கள்.
சென்னையில் இன்று அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 2 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் 43 வயது உடையவர். ஏற்கனவே அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது. மஞ்சள் காமாலை பிரச்சனையும் இருந்தது. மற்றொருவர் தைராய்டு பிரச்சனை உள்ளவர். அவர் 45 வயது உடையவர்.

பரிசோதனைகள் அதிகம்
இந்தியாவில் மொத்தம் 19 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுமார் 3 லட்சம் பரிசோதனைகளை செய்துவிட்டோம். உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ சி எம் ஆர் பரிந்துரைகளின்படி இந்த அளவுக்கு அதிகமாக பரிசோதனை செய்துள்ளது தமிழகம்தான்.

வெளிநாடுகள்
உரிய முறையில், அதிக எண்ணிக்கையில் பரிசோதனை செய்வதால்தான் நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. மேலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கும், பரிசோதனைகள் செய்து தனிமைப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல் முறை குறைவு
தமிழகத்தில் இதுவரை 9 ஆயிரத்து 674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்து நாட்களுக்குப் பிறகு இன்றுதான் முதல் முறையாக பாதிப்பு என்பது 500 என்பதைவிட குறைந்துள்ளது. இறப்பு விகிதம் 0.67 சதவீதமாக உள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2240.

சென்னை நிலவரம்
மே 10 ஆம் தேதி சென்னையில் 509 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது, மே 11ம் தேதி 538, 12ஆம் தேதி 510 என்ற நிலை இருந்தது. இந்த நிலையில்தான் சென்னையில் இன்று 363 பேர் என்ற அளவுக்கு பாதிப்பு குறைந்து உள்ளது. இன்று 11,965 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications