அடுத்த சில மணி நேரங்கள் முக்கியம்.. சென்னையில் மீண்டும் தொடங்கிய மழை.. 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. நேற்று மாலைக்கு பின் லேசாக குறைந்திருந்த மழை மீண்டும் இன்று அதிகாலையில் இருந்து தீவிரம் எடுத்துள்ளது.

Recommended Video

    Chennai-ல் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை மையம்

    ஒரு பக்கம் அரபிக்கடல், இன்னொரு பக்கம் வங்கக்கடல் என்று இரண்டு பக்கமும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கிக்கொண்டு இருப்பதால் தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் ஏற்கனவே உருவாகி உள்ள தாழ்வு நிலை காரணமாக மேற்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இன்னொரு பக்கம் வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கும். இதனால் தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மழை பெய்கிறது

    மழை பெய்கிறது

    அதிகாலையில் இருந்து ஏற்கனவே தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை விட்ட மழை இரவு நேரத்தில் மீண்டும் தொடங்கியது. அதிகாலையில் இருந்து பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது.

    சென்னை

    சென்னை

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை,திருப்பூர், ஈரோடு, கரூர், ,தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து அதிகாலை வரை விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

    டெல்டா

    டெல்டா

    மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய டெல்டா மாவட்டங்களில் அதிகாலையில் தொடங்கிய மழை தீவிரம் எடுத்துள்ளது. தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கடுத்து ஓடுகிறது. டெல்டாவில் பல்வேறு ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் மழை காரணமாக நிரம்பி உள்ளன.

    அடுத்த சில மணி நேரம்

    அடுத்த சில மணி நேரம்

    சென்னை, கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, நெல்லை, வேலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் ஆகிய 16 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில மணி நேரங்கள் இங்கு மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    காற்று

    காற்று

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வரும் நிலையில் தற்போது மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று வங்கக்கடலில் 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ளது. அதேபோல் கடல் லேசாக கொந்தளிப்பாக காணப்படும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+