தமிழகம் மட்டுமே குறைந்த விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: தமிழகம் மட்டுமே குறைந்த விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே மின் வெட்டு பிரச்சினை நிலவும் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆகும். இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த சில மாதங்களாக சில இடங்களில் ஆங்காங்கே மின் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், ஒரு சில இடங்களில் அணில் மின் வயரில் ஏறி குதித்து விளையாடியதால் மின் கமபிகள் அறுந்துவிட்டது என்றார்.

மின்வெட்டு
மின் வெட்டுக்கு காரணம் அணில் என அவர் கூறியதிலிருந்தே நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர். இதையடுத்து மெல்ல மெல்ல நிலக்கரி தட்டுப்பாடு பிரச்சினை தலைதூக்கியது. கடந்த மாதம் இறுதியில் கரூரில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

3 மாநிலங்கள்
அப்போது அவர் தமிழகம் உள்பட ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமாக சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சீரான மின் விநியோகம்
ஆனால் தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் விநியோகம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தவறான கருத்துகளை பேசி மக்களிடம் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் 6 முதல் 7 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது.

காற்றாலை
தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது என்றார் அவர். இந்த நிலையில் இன்றைய தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், தமிழகம் மட்டுமே குறைந்த விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது.

நிலக்கரி டெண்டர்
விதிமுறைகளுக்கு உட்பட்டே நிலக்கரி டெண்டர் விடப்படுகிறது. ஆறரை நாட்களுக்கான நிலக்கரி தற்போது கையிருப்பில் உள்ளது. குஜராத் உள்பட பிற மாநிலங்கள் கூடுதல் விலைக்கே இறக்குமதி செய்கின்றன. தமிழகத்தில் ஓராண்டில் 24 ஆயிரம் மின்மாற்றிகளை மாற்றியிருக்கிறோம் என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications