சென்னை உட்பட சில பகுதிகளில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு.. இலங்கை கடலில் சூறாவளி: புவியரசன் தகவல்
Recommended Video
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும், 30ம் தேதி முதல், 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுவையில் நவம்பர் 30, டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்ய கூடும்.

பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில், கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையில், மேற்குறிப்பிட்ட 3 நாட்களில், மிதமானது முதல், கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த, மழை அளவைப் பொறுத்த அளவில் தாம்பரத்தில் 15 சென்டி மீட்டர் மழையும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 10 சென்டிமீட்டர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 8 சென்டிமீட்டர், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில், சூறாவளி காற்று வீச இருப்பதால், மேற்கண்ட பகுதிகளுக்கு, மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில், தமிழகத்தில் 35 செ.மீ மழை பெய்யும். இந்த முறை, 32 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில், இந்த காலகட்டத்தில், 59 செ.மீ மழை பெய்யும். இந்த முறை 39 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் வட கிழக்கு பருவமழை குறைவுதான். ஆனால், இன்னும் 20 நாட்கள் உள்ளன. அப்போது மழை பெய்து, இந்த விகிதத்தை ஈடுகட்டவும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications