தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. ப்ரமோஷனும் உண்டு.. யார் யார் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள இடமாற்றம் குறித்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிபிசிஐடி ஐஜியாக இருந்த தேன்மொழி, தமிழக போலீஸ் அகாதெமிக்கு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை ஏஎஸ்பியாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக், பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட தெற்கு எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட வடக்கு துணை ஆணையராக இருந்த ரோஹன் நாதன், கோவை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
தொழில் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக விவேகானந்தா சுக்லாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஆனந்த் குமார் ஐஏஎஸ், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரிக்கு மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி எஸ்பி ஸ்டாலினுக்கு கோவை நகர வடக்குப் பிரிவு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக டி.ரமேஷ்பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல் துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக கே ஆதி வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் துறை துணை ஆணையராக எஸ்.எஸ்.மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த குமார் ஜெயந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications