உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு.. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல்
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் முடிந்துள்ளதால் நாளை நாளை உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவலை அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற விருந்த நிலையில் திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக நடைபெறவில்லை. அதன் பிறகு மூன்று வருடங்களாக தொகுதி மறுவரையறை, வார்டு மறுவரையறை பணிகள் காரணமாக நடைபெறாமல் இருந்தது.

உள்ளாட்சி தேர்தல்
இதனிடையே விரைவாக உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் இதற்கான அறிவிப்பானை டிசம்பரில் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தது.

தேர்தல் ஆணையர் பழனிச்சாமி
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் முடிந்துள்ளதால் நாளை நாளை உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவலை அவர் கூறியுள்ளார்.

விடுமுறையின் போது
இதனிடையே அரையாண்டு தேர்வு விடுமுறையில் தான் உள்ளாட்சி தேர்தல் வைப்பது எளிதாக இருக்கும் என்பதால் டிசம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டும் தெரியவரும்.எனவே அதுவரை காத்திருக்க வேண்டும்.

இப்போது அறிவிப்பு
முன்னதாக உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக, திமுகவினர் தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியானது, அதை மறுக்கும் விதமாக அதிமுக மற்றும் திமுக இரண்டுமே விளக்கங்களை கொடுத்தன. இந்த நிலையில் தான் நாளை தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்துள்ளது,.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications