இதுதான் தொடக்கம்.. விழ விழ எழுந்து நிற்கும் நாம் தமிழர்.. தேர்தலில் மாஸ் செயல்பாடு.. மாபெரும் ஆதரவு!
Recommended Video
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி அதிக அளவில் வாக்கு சதவிகிதத்தை பெற்று வருகிறது. பல பகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் திமுக மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகிய இரண்டு பதவிகளுக்குமான தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 5067 இடங்களில் 4101 இடங்களுக்கு முடிவு தெரிந்துள்ளது. அதில் திமுக 1934 , அதிமுக 1708, மற்றவை - 438 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இன்னொரு பக்கம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 515 இடங்களில் 453 இடங்களுக்கு முடிவு தெரிந்துள்ளது. அதில் திமுக 238, அதிமுக 214, மற்றவை - 1 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மொத்தத்தில் இரண்டிலும் திமுகதான் தற்போது முன்னிலை வகிக்கிறது.

போட்டி
இந்த தேர்தலில் திமுக அதிமுக இடையில்தான் தீவிரமாக போட்டி நிலவி வருகிறது. அதே சமயம் இன்னொரு பக்கம் அமமுக பல இடங்களில் மதிக்கதக்க வகையில் போட்டி போட்டுள்ளது. அதே சமயம் மக்கள் தமிழகம் முழுக்க நாம் தமிழர் கட்சிக்கும் பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளது.

நாம் தமிழர்
நேற்றுதான் தமிழகத்தில் நடந்த ஒரு தேர்தலில் நாம் தமிழர் முதல் வெற்றியினை பதிவு செய்தது. ஆம் கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி வென்றுள்ளது. அங்கு 11வது வார்டில், நாம் தமிழர் கட்சி சார்பில், விவசாயி சின்னத்தில், போட்டியிட்ட, நெ.சுனில், என்பவர் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்வாகியுள்ளார்.

வெற்றி எப்படி
இவர் அதிமுக வேட்பாளர் சிலுவைதாசனை விட 218 வாக்குகள் அதிகம் பெற்று சுனில் வெற்றி பெற்றார். இதேபோல் வட மாவட்டங்களில் சில இடங்களிலும், டெல்டா மாவட்டங்களில் சில இடங்களிலும் நாம் தமிழர் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

மாஸ் முன்னேற்றம்
பல பகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் பிடித்துள்ளது.இன்று மாலைக்குள் மேலும் சில இடங்களில் நாம் தமிழர் கட்சி வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதிமுக, திமுக மற்றும் அமமுக மூன்று கட்சிகளும் அதிக பண பலம் கொண்ட கட்சிகள். தமிழகத்தில் நாம் தமிழர் பெரிய அளவில் பண பலம் இல்லாமல் தேர்தலை சந்தித்தது.

தோல்வி
அதேபோல் இதற்கு முந்தைய தேர்தலில் தோல்விகளை சந்தித்தாலும் கூட, மனம் தளராமல் நாம் தமிழர் கட்சி விடாமல் தேர்தலை சந்தித்து வருகிறது. ஜனநாயக ரீதியாக மிகவும் ஆரோக்கியமான போட்டியை வழங்கி வருகிறது. இதன் பலனாக முதல் வெற்றியை சந்தித்துள்ளது

வாக்கு வங்கி அரசியல்
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் சில தேசிய கட்சிகளே மாநில கட்சிகள் பின்னில் நிற்கும் போது, சீமானின் நாம் தமிழர் கட்சியோ தனித்து சுயமாக வளர்ந்து வருகிறது. எத்தனை முறை விழுந்தாலும், மீண்டும் தன்னம்பிக்கையுடன் எழுந்து பிரச்சாரம் செய்து தேர்தல் சந்திக்கிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications