சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் ஆணைய அட்டவணையை பாருங்க.. தமிழகத்தில் நாங்கதான் 3வது பெரிய கட்சி.. சந்தோஷத்தில் பாமக!

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள்தான், தேர்தல் ஆணையத்தின் அட்டவணையை பார்த்தாலே இது புலனாகும் என்று பாமக கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள்தான், தேர்தல் ஆணையத்தின் அட்டவணையை பார்த்தாலே இது புலனாகும் என்று பாமக கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானது. திமுக, அதிமுகவை அடுத்து தமிழகம் முழுக்க அமமுக, நாம் தமிழர் கட்சிகள்தான் அதிக இடங்களை வென்றுள்ளது.

இதில் திமுக மாபெரும் வெற்றியை பெற்று, வெற்றி கூட்டணியாக திகழ்கிறது. அதிமுகவும் அதிக இடங்களை வென்று ஆபாரமாக வென்றுள்ளது. அதேசமயம் பாமகதான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று அக்கட்சி வாதிட்டு வருகிறது.

இரவு முழுக்க போராட்டம்.. களத்தில் விடாமல் நிற்கும் மாணவர்கள்.. விஸ்வரூபம் எடுத்த ஜேஎன்யூ தாக்குதல்இரவு முழுக்க போராட்டம்.. களத்தில் விடாமல் நிற்கும் மாணவர்கள்.. விஸ்வரூபம் எடுத்த ஜேஎன்யூ தாக்குதல்

அறிக்கை வெளியிட்டனர்

அறிக்கை வெளியிட்டனர்

இது குறித்து பாமக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பாமக மிகவும் வலுவான கட்சி என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. அதிமுக, திமுகவிற்கு சிறந்த மாற்று எப்போதும் பாமகதான் என்பது தற்போது உறுதியாகி உள்ளது. ஊராக உள்ளாட்சி தேர்தலில் பாமக சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

தேர்தல் ஆணையர்

தேர்தல் ஆணையர்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட முடிவுகளில் பாட்டாளி மக்கள் கட்சி எத்தனை இடங்களில் வெற்றிபெற்றது என்று கூறப்படவில்லை. பாமக பல இடங்களில் வென்றும் கூட, மற்றவை என்று பாமகவை குறிப்பிட்டு சுறுக்கிவிட்டனர். அதை எங்களால் ஏற்க முடியாது.

வெற்றி எப்படி

வெற்றி எப்படி

இந்த தேர்தலில் மற்ற கட்சிகளை விட பாமகவின் வெற்றி விழுக்காடு தான் அதிகம். பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட இடங்களில் 52.09 விழுக்காட்டு இடங்களை வென்றுள்ளது. கட்சி மீது மக்கள் வைத்து இருக்கும் தீவிர ஆதரவை இந்த வெற்றி காட்டுகிறது.

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக 36 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தொகுதிகளில் போட்டியிட்டு 16 இடங்களில் வென்றது. இது குறிப்பிடத்தகுந்த சாதனை. அதேபோல் 432 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு 217 இடங்களில் வென்று இருக்கிறோம் .

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனாலும் எங்கள் கட்சியின் பெயர் அந்த இணைய பக்கத்தில் இல்லை. இதனால் நாங்கள் வழக்கு தொடுக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அதற்கு பின் தேர்தல் ஆணையம் எங்கள் கட்சியின் பெயரை அதில் சேர்த்தது. இந்த அட்டவணை மூலம் தமிழகத்தில் நாங்கள் மூன்றாவது கட்சி என்று உறுதியாகிறது.

English summary
Tamilnadu Local body elections: We are the third-largest party in the TN state says PMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X