காலை 8 முதல் பகல் 12 வரை.. முழு ஊரடங்கின் போதும் ரேஷன் கடைகள் இயங்க.. தமிழ்நாடு அரசு அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கின் போதும் ரேஷன் கடைகள் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நேற்று முதல் தீவிர லாக்டவுன் அமலுக்கு வந்தது. மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த புதிய லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது.

Tamilnadu lockdown: Government allows rations shops to run from today

காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க கூட அடுத்த ஒரு வாரத்திற்கு அனுமதி கிடையாது. காய்கறி, பழங்கள் பொருட்கள் நாளையில் இருந்து மக்களின் வீடு வீடாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் அத்தியாவசிய தேவை என்று வெளியே சுற்றுவதை தடுக்கும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. அதே சமயம் தமிழகத்தில் முழு ஊரடங்கின் போதும் ரேஷன் கடைகள் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

ரேஷன் பொருட்களை நம்பி அடித்தட்டு மக்கள் பலர் உள்ளனர். மாளிகை பொருட்களை வாங்கி குவிக்க வசதி இல்லாத பல நூறு குடும்பங்கள் தமிழகத்தில் உள்ளன. இவர்கள் முழுக்க முழுக்க ரேஷன் பொருட்களை மட்டுமே நம்பி உள்ளனர்.

இதன் காரணமாக இவர்கள் பயன் பெறும் வகையில் முழு ஊரடங்கின் போதும் காலை 8 - மதியம் 12 வரை ரேஷன் கடைகள் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+