2020 ரிப்பீட்.. எச்சரித்த ரிப்போர்ட்.. முழு ஊரடங்கா? தமிழக முதல்வர் மீண்டும் மீட்டிங் போடுவது ஏன்?
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் நாளை மீண்டும் ஆலோசனை நடத்த இருக்கிறார். முதல்வரின் இந்த திடீர் ஆலோசனை பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவலுக்கு இடையில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இரவு நேர லாக்டவுன், ஞாயிறு முழு லாக்டவுன் மட்டும் விதிக்கப்பட்டு இருக்கிறது. மற்றபடி பெரும்பாலான சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
பெரிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத நிலையில் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் 1000க்கும் குறைவாக பதிவான கேஸ்கள் தற்போது 10000க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. சென்னையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாக தொடங்கி உள்ளது.

அச்சுறுத்தல்
தமிழ்நாட்டில் இப்படி திடீரென கேஸ்கள் உயர்வது பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் இப்போது பரவும் கொரோனா கேஸ்களில் பெரும்பாலான கேஸ்கள் ஓமிக்ரான் கேஸ்கள்தான். ஓமிக்ரான் பரவலின் தனிப்பட்ட கவுண்ட் வெளியிடப்படுவது இல்லை. ஏனென்றால் ஏற்கனவே ஓமிக்ரான் இந்தியாவில் ஆதிக்கம் மிக்க வைரஸாக உருவெடுத்துவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் இப்போது பதிவாகும் 10 ஆயிரம் கேஸ்களில் பெரும்பாலானவை ஓமிக்ரான் வகையாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது. இது மிகப்பெரிய அச்சமூட்டும் செய்தியாக மாறியுள்ளது.

ஓமிக்ரான் தமிழ்நாடு
ஏனென்றால் ஓமிக்ரான் மிக வேகமாக பரவ கூடியது. இதனால் தமிழ்நாட்டில் கேஸ்கள் வரும் நாட்களில் மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டே தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் மொத்தமாக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டால் மக்கள் அவதிப்படுவார்கள் என்பதால் தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு லாக்டவுன் போடப்பட்டு உள்ளது.

மக்கள் செய்யும் தவறு
ஆனால் மக்கள் இந்த கட்டுப்பாடுகளை மதிக்காமல் பகல் நேரத்தில் அதிக அளவில் வெளியே சுற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது. இரவில் தானே லாக்டவுன் என்று பகல் முழுக்க அதிகமாக வெளியே சுற்றுகிறார்கள். அதேபோல் ஞாயிறு லாக்டவுன் என்பதால் சனிக்கிழமை மார்க்கெட்டுகளில் பெரும் கூட்டம் காணப்படுகிறது. அதிலும் நேற்றெல்லாம் சென்னையில் காய்கறி மார்கெட்டுகள், மீன் மார்க்கெட்டுகளில் மிகப்பெரிய அளவில் கூட்டம் காணப்பட்டது. பல ஆயிரம் பேர் கூட்டம் கூட்டமாக சாலைகளில் நின்று பொருட்களை வாங்கினார்கள்.

தி நகர்
அதேபோல் தி நகர் போன்ற ஷாப்பிங் ஏரியாக்களில் பல நூறு பேர் கூட்டமாக நின்று பொங்கல் ஷாப்பிங் செய்து கொண்டு இருந்தனர். சென்னையில் மட்டுமின்றி திருச்சி, மதுரை, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, தஞ்சாவூர், கோவை போன்ற மற்ற பெருநகரங்களிலும் இதேதான் நிலைமை. இதனால் தமிழ்நாட்டில் மேலும் கேஸ்கள் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் இந்த மாத இறுதியில் கொரோனா கேஸ்கள் உச்சம் அடையும் என்று ரிப்போர்ட் ஒன்று எச்சரித்துள்ளது.

எச்சரித்த ரிப்போர்ட்
Indian Institute of Science and Indian Statistical Institute (IISc-ISI) மூலம் இந்த ரிப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் முதல் இரண்டு அலைகளில் ஏற்பட்ட கேஸ்களை விட அதிக கேஸ்கள் மூன்றாம் அலையின் உச்சத்தின் போது ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப்படி தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் ஜனவரி மாத இறுதியில் 80 ஆயிரம் என்ற அளவை தொடும். அதாவது இன்னும் இருபது நாட்களில் தமிழ்நாட்டில் தினமும் 80 ஆயிரம் கேஸ்கள் வரை பதிவாகும் என்று Indian Institute of Science and Indian Statistical Institute (IISc-ISI) ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அச்சம்
அதாவது இந்த மாத இறுதியில் 80 ஆயிரம் கேஸ்கள் தினமும் பதிவாகும் வாய்ப்புகள் உள்ளன. மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக வெளியே சுற்றும் நிலையில்தான் இந்த ரிப்போர்ட் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை செய்ய இருக்கிறார். நாளை மருத்துவ அதிகாரிகள், வல்லுனர்கள், சுகாதாரத்துறை நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருக்கிறார். கூடுதல் லாக்டவுன் போடுவது பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார்.

தலைமை செயலகம்
இது தொடர்பாக தலைமை செயலக வட்டாரத்தில் விசாரித்ததில் 3 விஷயங்களுக்காக இந்த மீட்டிங் நடக்க உள்ளது என்கிறார்கள். கொரோனா கேஸ்கள் அதிகரிப்பது பற்றியும் மருத்துவமனைகளை தயார் செய்வது பற்றியும் பேச உள்ளனர். மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்தும் பேச உள்ளனர் என்று கூறுகிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, தமிழ்நாட்டில் முழு லாக்டவுன் வராது. ஆனால் கூடுதல் கட்டுப்பாடுகள் வரலாம், தியேட்டர்கள் மொத்தமாக மூடப்படலாம், டாஸ்மாக் இயங்க கட்டுப்பாடுகள் வரலாம் என்று கூறுகிறார்கள்.

தமிழ்நாடு லாக்டவுன்
2020ல் இப்படித்தான் லாக்டவுனில் தளர்வுகள் வந்தது. அப்போது மக்கள் மொத்தமாக கூட்டம் கூட்டமாக வெளியே சென்றனர். இதனால் அப்போது ஆட்சியில் அதிமுக அரசு மீண்டும் லாக்டவுன் கொண்டு வந்து கட்டுப்பாடுகளை தீவிரம் ஆக்கியது. 2020ல் கடைசி சில மாதங்கள் இப்படி கட்டுப்பாடுகள் திடீரென அதிகரிக்கப்பட்டதை யாரும் மறக்க மாட்டார்கள். அதேபோல்தான் இந்த முறையும் ரிப்பீட் ஆகிறது. ஆனால் 2020ல் வந்தது போல கேஸ்கள் வந்தாலும் முழு லாக்டவுன் வராது, கட்டுப்பாடுகள் மட்டும் அதிகரிக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications