ஊரடங்கு நீட்டிப்பா.. பிரதமர் முடிவை ஏற்க தமிழக அமைச்சரவை முடிவு- தலைமை செயலாளர்
சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை ஏற்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்க தமிழக தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என இன்று பிரதமருடனான காணொலி காட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். ஒரு மாநிலத்தில் மட்டுமே ஊரடங்கை நீட்டிப்பதில் ஒரு பலனும் இல்லை என தெரிவித்தோம்.
எனவே ஊரடங்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முடிவை ஏற்பது என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக சண்முகம் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மருத்துவக் குழுவுடன் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. பின்னர், டாக்டர்கள் குழுவை சேர்ந்த டாக்டர் பிரதீபா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் பொது சுகாதாரம் மிக சிறப்பாக இருக்கிறது. அதை இன்னமும் பலப்படுத்த வேண்டும் என்பது பற்றி பேசினோம்.

மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை அறை ஒதுக்கப்பட்டு உள்ளது, அதை பற்றியும் ஆலோசித்தோம். நோயாளிகளுக்கு, எந்த மாதிரி தேவை உள்ளது, அவர்கள் குடும்பத்தினருக்கு எந்த மாதிரி தேவை உள்ளது என்பது பற்றியும் பேசினோம் . இந்த பிரச்சனையை எதிர்கொள்வதில், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் மிகவும் முக்கியம். அவர்களின் பாதுகாப்பு மிகுந்த முக்கியமும் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்றார்.
இந்த மாதிரி நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் இந்த எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. எனவே இன்னமும் 14 நாட்களுக்கு இந்த லாக் டவுன் நீடிக்கப்பட வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரை. இந்த 14 நாட்களில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசோதனை நடத்தி கண்டறியப்பட வேண்டும். இவ்வாறு டாக்டர் பிரதீபா தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications