அமைச்சரவை மாற்றம்.. முதல்வருக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. சிலருக்கு கல்தா.. "அவருக்கு" போஸ்டிங்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் எப்போது வேண்டுமானாலும் பெரிய மாற்றம் வரலாம், டெல்டாவில் பலரும் அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பல முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன. முக்கியமாக டெல்டா மாவட்ட எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.
தமிழக அமைச்சரவையை விரைவில் மாற்றியமைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். ஒவ்வொரு அமைச்சர்களின் ஃபெர்ஃமான்ஸ் குறித்த மாதாந்திர ரிப்போர்ட் ஸ்டாலினுக்கு கொடுத்து வருகிறது உளவுத்துறை.
சுமார் 7 அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லை என ரிப்போர்ட் சொல்கிறது. முதலில் ஆட்சி பொறுப்பேற்றதும் 100 நாளில் அமைச்சர்களின் செயல்பாடுகளை சீர்தூக்கி பார்க்கப்பட்டு அவர்களுக்கு மதிப்பெண் வழங்கி இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

அமைச்சரவை மாற்றம்
அதில் பாஸ் மார்க் எடுக்காதவர்கள் கேபினெட்டிலிருந்து கல்தா கொடுக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால், 100 நாட்கள் என்பது மிக குறுகிய காலம் என்பதால், மேலும் 3 மாதங்கள் அவகாசம் தரலாம் என ஸ்டாலினுக்கு யோசனை சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், 100 நாளில் கல்தா கொடுக்கும் படலத்தை நிறுத்தி வைத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின் என்று கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்து மீண்டும் தற்போது ஆலோசனைகள் எழ தொடங்கி உள்ளதாம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் இந்த மாற்றம் இருக்கும் என்கிறது அறிவாலய தரப்பு. துறை ரீதியான செயல்பாடுகளை வளர்த்துக் கொள்ளாதது, சின்ன சின்ன முறைகேடு குற்றச்சாட்டுகள், அமைச்சர்களை சுற்றியிருக்கும் உதவியாளர்களின் ராஜ்ஜியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கேபினெட்டை மாற்றுவது தவிர்க்க முடியாதது என்கிறார்கள் சீனியர் திமுகவினர்.

ஹோட்டலில் மந்திரி
மேலும், மூத்த அமைச்சர்கள் சிலர் தங்களின் இலாகா மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம். இதில் சீனியர் மந்திரி ஒருவர், தனக்கு பவர்ஃபுல் இலாகா கிடைக்கும் வரை அரசு பங்களாவில் குடியேற மாட்டேன் என ஹோட்டலிலேயே இதுவரை தங்கியிருக்கிறார். இதெல்லாவற்றையும் அலசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

அமைச்சரவை மாற்றம் கல்தா
அதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் அமைச்சரவையிலிருந்து சிலருக்கு கல்தாவும், சிலருக்கு இலாகா மாற்றமும் செய்ய ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். டெல்டா மாவட்டங்களுக்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது.

டெல்டா அமைச்சரவை
அதனால் அமைச்சரவை மாற்றத்தில் டெல்டா மாவட்டத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் என்கிறார்கள். முக்கியமாக டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளார். இவர் அமைச்சரவை ரேஸில் டாப்பில் இருக்கிறாராம். இது போக கும்பகோனம் அன்பழகன், திருவையாறு துரை சந்திரசேகரன், திருவாரூர் பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெற ரகசிய காய்களை நகர்த்தி வருகிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications