பெருகும் வரவேற்பு.. மக்கள் நீதி மய்யத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் அதிரடி ஆதரவு!
லோக்சபா மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஆதரவு அளித்து இருக்கிறது.
சென்னை: லோக்சபா மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஆதரவு அளித்து இருக்கிறது.
லோக்சபா தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகளுக்கு அடுத்தபடியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நல்ல வாக்குகளை பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.

இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிறைய சிறு சிறு இயக்கங்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகிறது.
அதன் ஒருபடியாக தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆவின் மற்றும் தமிழ்நாடு தனியார் பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஆதரவு அளித்து இருக்கிறது. இன்று மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து எதிர்வரும் தேர்தலில் தங்களின் ஆதரவை அளிப்பதாக இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
தமிழக முழுக்க இந்த இயக்கத்திற்கு பல உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த இயக்கம் ஆதரவு அளிப்பது மகிழ்வதை தவறுவதாக கமல்ஹாசன் நன்றி தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications