சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"குட்மார்க்".. இவர்தான் சரியான ஆள்.. குறி வைத்த முதல்வர் ஸ்டாலின்.. கைமாற போகும் முக்கிய பொறுப்பு?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா காலத்தில் தமிழ்நாடு அமைச்சரவை மிக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அமைச்சரவை பொறுப்புகளில் சின்ன மாற்றம் ஒன்று கொண்டு வரப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

Recommended Video

    TN மருத்துவக்கட்டமைக்கு சவாலான 2nd அலை.. விரைவில் மீள்வோம்! MK Stalin நம்பிக்கை | Oneindia Tamil

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக மொத்த தமிழ்நாடு அமைச்சரவையும் களத்தில் உள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முதல்வர் ஸ்டாலின் என்று எல்லோரும் கொரோனா தடுப்பு பணிகளில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    வேகம் காட்டும் தமிழகம்.. போதிய வேக்சின் ஒதுக்காமல் தாமதிக்கும் மத்திய அரசு.. அதிர்ச்சி தரும் பின்னணிவேகம் காட்டும் தமிழகம்.. போதிய வேக்சின் ஒதுக்காமல் தாமதிக்கும் மத்திய அரசு.. அதிர்ச்சி தரும் பின்னணி

    இந்த அமைச்சர்தான் இந்த பணியை செய்ய வேண்டும், அவர் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லாமல், எல்லோரும் களத்தில் இறங்கி வேகமாக பணிகளை செய்து வருகிறார்கள்.

    பொறுப்பு

    பொறுப்பு

    அதிலும் முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சேகர் பாபு, மா . சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் பணிகளை செய்து வருகிறார்கள். கொரோனா தடுப்பு பணியில் இவர்கள் முன்களத்தில் நின்று முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள். ஒரு பக்கம் தங்கம் தென்னரசு ஆக்சிஜன் தேவை தொடங்கி வேக்சின் உற்பத்தி வரை பல துறைகளில் கலக்கி வருகிறார்.

    பிடிஆர்

    பிடிஆர்

    பிடிஆர் ஜிஎஸ்டி கூட்டம், கொரோனா காலத்தில் முறையான நிதி மேம்பாடு, முறையான திட்டங்களோடு நிதி திரட்டுவது, திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது என்று இந்தியா முழுக்கவே தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார். மா. சு ஒரு சுகாதாரத்துறை அமைச்சராக சென்னையில் மட்டும் இல்லாமல் தமிழகம் முழுக்க தொகுதி வாரியாக பறந்து கொண்டு இருக்கிறார். சேகர் பாபு தொடக்கத்தில் இருந்தே கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தினார்.

    கோவில்

    கோவில்

    அறநிலையத்துறை அமைச்சராக கோவில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்தவர், இன்னொரு பக்கம் வேக்சின் செலுத்துவது, சென்னையில் கொரோனா பரவலை தடுப்பது கோவில் அன்னதான உணவுகளை கொரோனா நோயாளிகளுக்கு அனுப்புவது என்று புதிய புதிய முயற்சிகளை செய்து வருகிறார். முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையில் இருக்கும் எல்லா அமைச்சர்களும் கிட்டத்தட்ட இப்படி கூடுதல் பொறுப்புகளை கவனித்து வருகிறார்கள்.

    ஆனால்

    ஆனால்

    நிலைமை இப்படி இருக்க கொரோனா காலத்தில் தமிழ்நாடு அமைச்சரவை மிக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அமைச்சரவை பொறுப்புகளில் சின்ன மாற்றம் ஒன்று கொண்டு வரப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. யாருடைய அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட போவது இல்லையாம். ஆனால் ஒரு அமைச்சரிடம் இருக்கும் கூடுதல் துறை இன்னொரு அமைச்சருக்கு மாற்றப்படும் என்கிறார்கள்.

    ஏன்

    ஏன்

    தமிழ்நாடு அமைச்சரவையில் ஒவ்வொரு அமைச்சர்களும் முக்கிய துறை ஒன்றையும் கூடுதலாக சின்ன சின்ன சில துறைகளையும் கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த கூடுதல் துறைகளில் ஒன்று ஒரு அமைச்சரிடம் இருந்து இன்னொரு அமைச்சருக்கு பறக்கும் என்று கூறுகிறார்கள். முதல்வர் மு. க ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர் ஒருவருக்கு இந்த கூடுதல் பொறுப்பு செல்லும் என்கிறார்கள்.

    அதிருப்தி இல்லை

    அதிருப்தி இல்லை

    இதில் யாருக்கும், யார் மீதும் அதிருப்தி எல்லாம் இல்லையாம். நிர்வாக வசதிக்காகவும், முக்கிய சில முடிவுகளை எடுக்க வசதியாகவும் அமைச்சரவையில் பொறுப்பு ஒன்றை மாற்ற உள்ளனராம். ஒரு மாதத்தில் அமைச்சர்கள் செயல்பட்ட விதத்தை வைத்து மார்க் போட்ட முதல்வர் ஸ்டாலின், அதன் அடிப்படியில் முக்கிய பொறுப்பை மாற்ற போகிறார் என்கிறார்கள்.

     என்ன துறை அது

    என்ன துறை அது

    இந்த துறை கொஞ்சம் முக்கியமானது என்றும் கூறுகிறார்கள். கொரோனா காலம் என்பதாலும் லாக்டவுனுக்கு பின் தமிழகம் நிர்வாக ரீதியாக நிறைய சவால்களை எதிர்கொள்ளும் என்பதால், அந்த ஒரு துறை முக்கியத்துவம் பெறுகிறது. இதனால்தான் அந்த துறைக்கான பொறுப்பில் மட்டும் மாற்றங்களை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் உள்ளதாக என்று கூறப்படுகிறது.

    English summary
    Tamilnadu ministry may see a small change to make the works more efficient soon says sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X