2 ஆண்டுகளுக்குப் பின்..உற்சாகமாக தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை-ஆரத்தழுவி வாழ்த்துகள் பரிமாற்றம்!
சென்னை: தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரஜ்மான் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் பெரும் எண்ணிக்கையிலான் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
ரம்ஜான் இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுசரிக்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை கடந்த ரமலான் மாதத்தில் கடைபிடித்து வந்தனர். 30-வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி 30-வது நாளான இன்று பிறை தெரியும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாகுதீன் முகமது அயூப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் நோன்பு முடித்து இன்று ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் அல்லது ரம்ஜான் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் இரண்டாண்டுகளுக்குப் பின் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

புதுக்கோட்டை, கன்னியாகுமரி
ரம்ஜான் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்கலம் கிழக்கு பகுதியில் உள்ள முகைதீன் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் 200க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நாகுடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். (8.58am) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இடலாக்குடியில் உள்ள பாவா காசிம் ஒலியுல்லா பள்ளி வாசல் எதிரே உள்ள மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் பெரியவர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாகர்கோவில்,இடலாக்குடி,வடசேரி, திட்டுவிளை,மாதவலாயம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கு ஒருவர் ஆரத் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

திருவள்ளூரில் சிறப்பு தொழுகை
திருவள்ளூர் பழைய டோல்கேட் அருகே ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பின்னர் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் ஒருவர் கட்டித் தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்கள் குழந்தைகள் என அனைவரும் தொழுகையில் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் இதேபோல் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்கள் இந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகளில், இஸ்லாமியர்கள் திரளாக வந்திருந்து சிறப்பு தொழுகை நடத்தினர். மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகைகளை நடத்தினர்.250க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

நெல்லையில் கோலாகலம்
நெல்லை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மேலப்பாளையத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொழுகை நடந்தது. மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் நடந்த சிறப்பு தொழுகையில் தவ்ஹீத் ஜமாத் மாநில மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதுபோன்று நெல்லையில் பேட்டை, பாளையங்கோட்டை, மற்றும் மாவட்ட பகுதியில் ஏர்வாடி, களக்காடு, பத்தமடை, உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் புத்தாடைகள் அணிந்து தொழுகையில் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் ஏழை எளிய மக்களுக்கும் உதவிகள் செய்தனர். மேலப்பாளையம் ரெட்டையார்பட்டி சாலையில் அமைந்துள்ள மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார் அதேபோல் மேலப்பாளையம் குறிச்சி சாலையில் அமைந்துள்ள மசூதியில் நடைபெற்று வரும் சிறப்பு தொழுகையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் பங்கேற்றார்.

திருச்சி, மேட்டுப்பாளையம்
திருச்சி அண்ணா நகர் உழவர் சந்தையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பெருநாள் தொழுகை மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சபீர் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். (10.05)மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்புத்தொழுகை நடைபெற்றது. இதில் சிறுவர்,சிறுமியர் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications