Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, அனைத்து ஆட்சியாளர்களும் நம்பிய ஒரே அதிகாரி கே.சண்முகம்!

ஷன்மதி கொலை செய்யப்பட்டதில் பொதுமக்கள் திரண்டு மறியல் செய்தார்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    K Shanmugam IAS: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் நியமனம்... டிஜிபியாக திரிபாதி நியமனம்!- வீடியோ

    சென்னை: பலத்த எதிர்பார்ப்புக்கு நடுவே, தமிழகத்தின், புதிய தலைமைச் செயலாளராக, கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் விரும்பி, இவரை அந்த பதவிக்கு தேர்ந்தெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், சண்முகம் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கே.சண்முகம் தமிழகத்தின் 46வது தலைமைச் செயலாளராகும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2016ம் ஆண்டு, அப்போது தலைமைச் செயலாளராக பதவி வகித்த ராம மோகன ராவ் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். எனவே ராம மோகன ராவ் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதில் சண்முகம், தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    அப்போதே பேச்சு

    அப்போதே பேச்சு

    ஆனால், இவரை விட சீனியரான, அதாவது 1981ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2010ம் ஆண்டு முதல், இதுவரை, தொடர்ச்சியாக நிதித்துறை செயலாளராக பதவி வகித்து வருபவர் கே.சண்முகம். இந்த காலகட்டங்களில், திமுக மற்றும் அதிமுக ஆட்சி அதிகாரத்திற்கு மாறி வந்தாலும் கூட, இதே துறையில் பதவி வகித்தார் சண்முகம். கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலங்களில் ஒரே பதவியில் பொறுப்பு வகித்தவர் சண்முகம் ஐஏஎஸ் மட்டுமே என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில்.

    நிதி கையாண்ட திறமை

    நிதி கையாண்ட திறமை

    இந்த அளவுக்கு அவர் மீது இரு ஆட்சியாளர்களுக்கும் அபார நம்பிக்கை உண்டு. காரணம், நிதி பற்றாக்குறை இருந்தபோதிலும், கருணாநிதி கொண்டு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உதவியவர் இவர். போலவே, ஜெயலலிதா அரசு கொண்டு வந்த அம்மா கேண்டீன் திட்டத்தையும் செயல்படுத்த நிதி ஒதுக்கியவர்.

    முதல் சாய்ஸ்

    முதல் சாய்ஸ்

    தமிழக அரசு நிதி சுமையில் சிக்கிக் கொள்ளாமல், அதே நேரம், அதிகம் செலவுபிடித்த இவ்விரு திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தியவர்தான், சண்முகம். எனவேதான், இவர் அனைத்து ஆட்சியாளர்களின் அபிமானம் பெற்றவராக விளங்கினார். இப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவரே முதல் சாய்சாக மாறியுள்ளார். எனவேதான், சண்முகத்தை விட சீனியர்களான ஆர்.ராஜகோபால், ராஜீவ் ராஜன் போன்றவர்கள் இருந்தும், தலைமைச் செயலாளர் பதவியை சண்முகத்திற்கு கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

    சீனியர் அதிகாரிகளில் ஒருவர்

    சீனியர் அதிகாரிகளில் ஒருவர்

    சண்முகம், கூட்டுறவு துறை முதன்மை செயலாளராகவும், அதற்கு முன்பாக, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் பதவி வகித்த அனுபவம் உள்ளனவர். சேலம், சண்முகத்தின் சொந்த ஊராகும். வேளாண் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் 1985 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாகும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+