Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலை பொங்கல், அவிச்ச முட்டை.. மதியம் சிக்கன் கிரேவி.. மாலை சூடா டீ.! கைதிகளுக்கு புதிய உணவு பட்டியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் அறிவிக்கப்பட்டதை போலச் சிறை கைதிகளின் உணவு முறை மாற்றப்பட்டுள்ளது. புதிய மெனுவில் பொங்கல், முட்டை சிக்கன் கிரேவி உள்ளன.

தமிழ்நாடு அரசின் மாநில மாநில பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பல்வேறு துறைகளிலும் அமைச்சர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

சட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அது அப்போதே பலரது கவனத்தையும் ஈர்த்து.

Tamilnadu prisoner are getting new food menu from today

கைதிகள்: குறிப்பாக அனைத்து சிறைகள்- மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள், மாவட்ட சிறை, புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி என அனைத்திலும் நூலக வசதி ஏற்படுத்தப்படும் என அறிவித்தார். மேலும் ஆத்தூர், திண்டுக்கல், விருதுநகர், நாகர்கோவில், நாகை, ராமநாதபுரம், கோபி, செங்கல்பட்டு என 8 மாவட்ட சிறைகள் மற்றும் 105 கிளை சிறைகளில் சிசிடிவி கேமரா அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்

மேலும், தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறைக்குள் எடுத்துச் செல்வதைத் தடுக்கும் வகையில், 13 மாவட்ட சிறைகளில் ரூ.2.73 கோடி செலவில் x ray baggage scanner வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இது மட்டுமின்றி, ஒவ்வொரு சிறையிலும் கைதிகளுக்கு ஆடியோ கால் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இது 3 நாட்களுக்கு ஒறு முறை, மாதத்திற்கு 10 முறை என உயர்த்தப்படும் என அறிவித்தார். வீடியோ கால் வசதியும் கொண்டு வரப்படும் என்றார்.

உணவு முறை: குறிப்பாகச் சிறை கைதிகளின் உணவு முறையை மாற்றும் திட்டம் ரூ.26 கோடியில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதாவது கைதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வல்லுநர் குழுவின் பரிந்துரையை அடிப்படையாக வைத்து உணவு முறை மாற்றியமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

Tamilnadu prisoner are getting new food menu from today

அதன்படி இப்போது உணவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய உணவு முறையைப் புழல் மத்திய சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். காலை, மாலை என இரு வேளையும் டீ மற்றும் உணவு குறித்த தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஏ மற்றும் பி என இரண்டு களாஸ் கைதிகளுக்கும் உணவு மெனு தயாரிக்கப்பட்டுள்ளது.

தினசரி செலவு: அதன்படி ஏ க்ளாஸில் உள்ளவர்களுக்கு வாரத்திற்கு 3 நாட்களும் ஏ க்ளாஸில் உள்ளவர்களுக்கு இரண்டு நாட்களும் அசைவ உணவு வழங்கப்படுகிறது. காலை பொங்கல், அவிச்ச முட்டை, மதியம் சிக்கன் கிரேவி, மாலை சூடான சுண்டல், டீ இரவு சப்பாத்தி சென்னா. ஆகியவை இந்த மெனுவில் இடம் பெற்றுள்ளன. சிறை கைதிகளுக்கு எப்போது எந்த உணவு வழங்கப்படுகிறது என்பதை விரிவாக விளக்கி அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முன்பு பி க்ளாஸில் ஒரு சிறை கைதியின் உணவுக்கான செலவு தினசரி 96 ரூபாய் என்று இருந்த நிலையில், இப்போது அது 135 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ஏ க்ளாஸ் கைதிக்கான தினசரி உணவு செலவும் 146இல் இருந்து 208 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+