இன்னும் புயலே வரவில்லை.. அதற்குள் எதிர்பார்க்காத "ரெக்கார்ட்" படைத்த நுங்கம்பாக்கம்.. என்ன நடக்குமோ?
சென்னை: வடகிழக்கு பருவமழை இப்போதுதான் தொடங்கி உள்ளது.. இன்னும் பெரிதாக புயல் எதுவும் வீசவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே மழை அளவில் நுங்கம்பாக்கம் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்துள்ளது.
Recommended Video
கடந்த சனிக்கிழமை மாலை சென்னையில் தொடங்கிய மழை விடாமல் பெய்து வருகிறது. சென்னையில் சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை மட்டும் 207 மிமீ மழை பெய்துள்ளது.
2015க்கு பின் பெய்த மிக அதிக மழை அளவு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக மழை காரணமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் கிட்டத்தட்ட கொள்ளளவை எட்டியது. இதனால் ஏரிகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

நேற்று
அதன்பின் நேற்றும் சென்னையில் பரவலாக மழை பெய்தது. சனிக்கிழமை அளவிற்கு இல்லை என்றாலும் மாலை நேரத்திற்கு பின் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் அடையாறு, போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், ஆவடி, கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் லேசான மழையும் மழை, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் கனமழை மிக அதிக அளவில் மழை பதிவானது.

எவ்வளவு
கடந்த சனிக்கிழமை மட்டும் சென்னையில் வில்லிவாக்கத்தில் 162 மிமீ மழை பெய்துள்ளதாது. அதேபோல் நுங்கம்பாக்கத்தில் 145 மிமீ மழை பெய்துள்ளது. புழல் பகுதியில் 111 மிமீ மழை பெய்துள்ளது. இந்த நிலையில்தான் நுங்கம்பாக்கத்தில் இந்த வருடம் பெய்ய வேண்டிய மொத்த மழை சராசரி அளவு ஏற்கனவே பெய்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நுங்கம்பாக்கம்
வருடாவருடம் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் சராசரியாக 140 சென்டிமீட்டர் மழை பெய்யும். ஒன்று தென்மேற்கு பருவமழையின் போது அதிக மழை பெறும் அல்லது வடகிழக்கு பருவமழையின் போது அதிக மழை பெறும். இதனால் மழை அளவு 140 சென்டிமீட்டரை தாண்டுவது அதிசயம். ஆனால் இந்த முறை ஏற்கனவே நுங்கம்பாக்கத்தில் 141 சென்டி மீட்டர் மழை பதிவாகி விட்டது.

ரெக்கார்ட்
இந்த வருடம் பதிவாக வேண்டிய மழை ஏற்கனவே பதிவாகிவிட்டது. வடகிழக்கு பருவமழை இப்போதுதான் தொடங்கி உள்ளது.. இன்னும் பெரிதாக புயல் எதுவும் வீசவில்லை. அதேபோல் வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் 45 நாட்களுக்கும் மேலாக உள்ளது. ஆனால் அதற்கு உள்ளாகவே நுங்கம்பாக்கத்தில் சராசரி மழை பெய்துவிட்டது. இதனால் மீதம் உள்ள நாட்களில் மேலும் மழை அதிகம் பதிவாகி புதிய ரெக்கார்ட் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன நடக்குமோ?
இதனால் சென்னையில் இந்த வருடம் நீர் பிரச்சனை இருக்காது. ஆனால் சாலைகளில் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகள் அதிகம் இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. என்ன நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கிண்டியில் சராசரி வருட மழை அளவு 138 செமி என்ற நிலையில் அங்கு ஏற்கனவே 132 செமி பெய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. நுங்கம்பாக்கம் மட்டுமின்றி சென்னையின் மற்ற பகுதிகளிலும் இந்த வருடம் சராசரியை விட அதிக மழை பதிவாகும் வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications