ஏகப்பட்ட யூ-டர்ன்.. குழப்பி எடுக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை.. ஏன்? வங்க கடலில் என்னதான் நடக்கிறது?
சென்னை: வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வானிலை மைய ஆய்வாளர்களை குழப்பி வருகிறது. கணிப்புகளை விஞ்சி தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருகிறது.
Recommended Video
அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்கக்கடலில் அதற்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த வெள்ளிக்கிழமைதான் காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் கரையை கடந்தது.
இது பெரிய அளவில் வலிமை பெறாமல் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடந்தது. இதையடுத்துதான் அந்தமான் கடல் பகுதியில் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

நகர்கிறது
இது மெல்ல மெல்ல மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இதனால் ஆந்திர அருகே செல்லும் என்று கணிக்கப்பட்டது. நேற்று முதல்நாள் வரை காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா அருகே கரையை கடக்கும் என்றே தெரிவிக்கப்பட்டது. நேற்று முதல்நாள் மேற்கொள்ளப்பட்ட வானிலை கணிப்புகளில் கூட காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர அருகே செல்கிறது. இதனால் சென்னைக்கு மழை அதிகம் இருக்காது என்றே கணிக்கப்பட்டது.

மாற்றம் தேவையில்லை
ஆனால் அதன்பின் நிலைமை மாற தொடங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு வடமேற்கு திசையில் சென்று சென்னைக்கு அருகில் வந்தது. இதனால் சென்னைக்கும் ஆந்திர பிரதேசத்திற்கும் இடையில் இந்த தாழ்வு பகுதி கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று காலை வரை காற்றழுத்த தாழ்வு பகுதி வலிமை அடைவதற்கான அறிகுறி தெரியவில்லை.

அறிகுறி
அதன்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது உருமாற்றம் அடைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. மாறாக நேற்று திடீரென காற்றழுத்த தாழ்வு பகுதி வலிமைபெற தொடங்கியது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறாது என நேற்று வரை கணிக்கப்பட்ட நிலையில் தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்துள்ளது.

நகர்க்கிறது
இந்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நாளை வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளை வந்தடையும். அதோடு அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக கரையை கடக்கும் என்று கருதப்பட்ட இது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகும் அளவிற்கு வலிமை கொண்டதாக மாறி வருகிறது.

எங்கே?
வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதி அருகே நாளை நெருங்கும் நிலையில் ஆந்திரா அருகே இது கரையை கடக்கும். இதனால் வட தமிழ்நாட்டில் கனமழை பெய்யும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும். இதையடுத்து இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் அதிக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன?
பல யூ-டர்ன் போட்டு வானிலை அதிகாரிகளை குழப்பி, இந்த தாழ்வு நிலை திடீரென வலுப்பெற வங்கக்கடலில் நிலவும் வெப்பநிலையே காரணமாக பார்க்கப்படுகிறது. வங்கக்கடலில் கடல் மட்டத்திற்கு மேல் இருக்கும் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அது தாழ்வு பகுதியின் வலிமையை அதிகரிக்கும். வங்கக்கடலில் அதிகரித்து வரும் வெப்பநிலைதான் இந்த தாழ்வு மண்டலம் வலிமை அடைய காரணம். இதுதான் வானிலை வல்லுனர்களை குழப்பி உள்ளது.

வேகம்
இதனால்தான் சமீபத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட தாழ்வு நிலை தொடர்ந்து வானிலை ஆய்வாளர்களை குழப்பி வருகிறது. அங்கு நிலவும் வெப்பநிலை காரணமாக எப்போது தாழ்வு நிலை வலிமை பெறும், எப்போது வலிமைபெறாது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் ஏற்பட ஏற்பட வானிலை கணிப்புகளில் நிறைய சிக்கல்கள் ஏற்படும் என்று ஏற்கனவே வல்லுநர்கள் பலர் எச்சரித்தனர். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த தாழ்வு நிலையம் வல்லுனர்களை குழப்பி வலிமைபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications