Tamilnadu Rains: இந்த 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு.. 5 மாவட்டங்களில் வாட்டும் குளிர்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது... டிசம்பர் மாதம் துவங்கியதுமே இந்த மழை பரவலானது, படிப்படியாக குறைய ஆரம்பித்தது.. ஆனால், இரவு நேரங்களில் லேசான பனிப்பொழிவு துவங்கியது..
அதேசமயம் எதிர்பார்த்த அளவுக்கு குளிரும் காணப்படவில்லை.. இந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகாலை நேரங்களில் குளிர்ச்சி நிலவியதே தவிர, குளிர் பாதிப்பு குறைவாகவே காணப்பட்டது.

குளிர்
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகாலையில் பனிப்பொழிவு குறைந்து காணப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் தொடர்ந்து 3 நாட்கள் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது... இதனிடையே, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை மையம் அறிவித்து இருந்த நிலையில், பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

9 மாவட்டங்கள்
பிறகு, 18 மற்றும் 19 நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.. இந்நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது

பனிமூட்டம்
அதேநேரத்தில் இரு நாட்களுக்கு நீலகிரி கோவை, சேலம் திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.. சென்னையை பொறுத்தவரை இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, 5 மாவட்டங்களில் இன்று பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

செய்திக்குறிப்பு
இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று பகல் வரை லேசான மழை பெய்யும். இதையடுத்து வரும், 23ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

எச்சரிக்கை இல்லை
பனி நிலவரத்தை பொறுத்தவரை, நீலகிரி, கோவை, சேலம், திருப்பத்துார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் மலை பகுதிகளில், இன்று அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும்... சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சமாக 29 டிகிரியும், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவாகும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications