அவுட் ஆஃப் சிலபஸ்.. அதிக கனமழை பெய்ய வாய்ப்பு.. ஒரு மாவட்டத்திற்கு வெதர்மேன் விடுத்த வார்னிங்!
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான வானிலை அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 5 நாட்களாக தமிழ்நாடு முழுக்க பரவலாக மழை பெய்தது. முக்கியமாக சென்னையில் கனமழை பெய்து வந்தது.
சென்னையில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய மழை விடாமல் நேற்று இரவு வரை பெய்தது. சென்னையின் பல பகுதிகளில் தற்போது மழை குறைந்துள்ளது.

சென்னை
காரைக்காலுக்கு ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் சென்னைக்கு அருகே நேற்று இந்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடந்தது. தாழ்வு மண்டலம் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ மாறமலே கரையை கடந்தது. ஆனாலும் வடதமிழ்நாட்டில் இதனால் மிக கனமழை பெய்தது. நேற்று மாலை 3 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியது.

வட தமிழ்நாடு
அதன்பின் இரவு வரை விடாமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இன்று அதிகாலையில் இருந்து சென்னையில் கொஞ்சம் மழை விட்டுள்ளது. ஆனாலும் சாலைகளில் தேங்கி உள்ள நீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. சென்னையில் மழை பெய்தது போலவே கடந்த ஒரு வாரமாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.

நீர்
வங்கக்கடலை ஒட்டிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. முக்கியமாக கன்னியாகுமரியில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில்தான் கன்னியாகுமரி மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். பிரதீப் ஜான் செய்துள்ள ட்வீட்டில்,

கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் பெய்த தீவிர மழையானது அவுட் ஆப் சிலபஃஸாக வந்துள்ளது. அதிலும் புள்ளி விவரங்களின் படி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கன்னியாகுமரியில் மிக கனமழை பெய்யும். தெற்கு கேரளா, கன்னியாகுமரி மண்டலத்தில் கனமழை பெய்யும்.
Recommended Video

சென்னை
சென்னையில் திடீரென தீவிர மழை பெய்தது போல மீண்டும் சில இடங்களில் இங்கும், அங்கும் ஏற்படும், பருவமழை காலம் என்பதால் இப்படி மழை பெய்யும். ஆனால் இதை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications