ரேஷனில் வருகிறது மாற்றம்.. காசு வேணாம்.. தமிழ்நாடு அரசு செம்ம.. முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
சென்னை: ரேஷனில் அடுத்த அதிரடியை தமிழ்நாடு அரசு செய்துள்ளது.. இந்த புது திட்டத்தை நாளை தமிழ்நாடு முழுவதும் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
மக்கள் மத்தியில், பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளது டிஜிட்டல் பண பரிவர்த்தனையாகும்.. இப்போதெல்லாம் பணத்தை பாக்கெட்டுகளில் வைத்து கொள்ள தேவையேயில்லை.. சின்ன பெட்டிக்கடை என்றாலும்கூட, யுபிஐ வசதியை பயன்படுத்தி பண பரிவர்த்தனையை செய்து கொள்கிறார்கள்.

யுபிஐ: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் + தனியார் வங்கிகள் என யுபிஐ (யுனிபைடு பேமென்ட் இன்டர்பேஸ்) வசதியை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் வசதிகள் அதிகரித்துவிட்டதால், தமிழகத்தின் 23 கூட்டுறவு வங்கிகளிலும் இந்த வசதி இப்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
4 நாட்களுக்கு முன்பு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.. அந்த அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள உள்ள அனைத்து 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர்.
தனியார்மயம்: தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கி சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் முழு திறனையும் பெற்றிருக்கின்றன. வாடிக்கையாளர்கள் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மூலமாகவும் NEFT, RTGS உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற முடியும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 623 நியாயவிலைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் கியூ ஆர் கோடு மூலமாக யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து 33,841 நியாயவிலைக் கடைகள், 41 கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்குகள் ஆகிய அனைத்திலும் விரிவுபடுத்தப்படும்" என்று கூறியிருந்தார்.
நாளை துவக்கம்: ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு உள்ளன. இதனால் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடி கள் போன்றவற்றில், "கியு ஆர் கோடு" ஸ்கேன்' செய்து, "கூகுள் பே, பேடிஎம்" போன்றவற்றில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம்..
ஸ்கேனிங்: ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு உள்ளன. இதனால் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடி கள் போன்றவற்றில், "கியு ஆர் கோடு" ஸ்கேன்' செய்து, "கூகுள் பே, பேடிஎம்" போன்றவற்றில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம்..
இந்த சேவை, முதல் கட்டமாக காஞ்சிபுரத்தில் உள்ள, 602 ரேஷன் கடைகளிலும், கடந்த மே 5ம் தேதி துவக்கப்பட்டது... இது வெற்றிகரமாக செயல்பட்டு வரும்நிலையில், நாளை தமிழ்நாடு முழுதும் விரிவுபடுத்தப்படுகிறது..
ஹேப்பி: மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதற்காக கூட்டுறவு துறை சார்பில், தனியார் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளதாம்.. இந்த தகவல், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications