சட்டகங்களுக்குள் பொருந்தாத தலைவன்! அடங்க மறுத்த பீனிக்ஸ்! தந்தை பெரியாரின் 50வது நினைவு தினம் இன்று

Subscribe to Oneindia Tamil

சென்னை; தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 24.12.2023 ஞாயிற்றுக்கிழமை இன்று தமிழ்நாடு முழுக்க பல்வேறு கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் இன்று தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்படுகிறது. 1973 டிசம்பர் 24ம் தேதி பெரியார் இயற்கை எய்தினார். தள்ளாத வயதிலும் ஜாதி, மூடநம்பிக்கைகள், அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய பெரியார் இயற்கை எய்தினார்.

Tamilnadu remembers Thanathai Periyar on his anniversary

1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்த பெரியார் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மொத்த தென்னிந்தியாவிற்கும் ஜாதி கட்டுமானத்தில் இருந்து விடுதலை ஏற்படுத்திக்கொடுத்து, திராவிட இனத்திற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஜாதி கட்டுப்பாடுகளில் கட்டுண்டு கிடந்த மக்களுக்கு சிறகுகளை கொடுத்தவர். பெண் விடுதலை, மறுமணம், ஜாதி ஒழிப்பு, சம உரிமை, சுயமரியாதை போன்ற விஷயங்களை வட மாநிலங்கள் இப்போதுதான் பேச தொடங்கி உள்ளது.

பெரியார்: ஆனால் தமிழ்நாட்டில் பெரியாரோ அதை 80 வருடங்களுக்கு முன்பே பேசிவிட்டார். 8,200 நாட்கள் சுற்றுப் பயணம், 10, 700 சுற்றுப்பயணம் என்று 8 லட்சத்திற்கும் அதிகமான கிமீக்கள் பயணித்து தமிழ்நாடு மக்களுக்கு சுயமரியாதை எண்ணத்தை விதைத்துவிட்டு சென்றவர் பெரியார். மொத்த நாடும் ஒரு பக்கம் செல்லும் போது தமிழ்நாடு மட்டும் எப்போது எதிர் திசையில் செல்ல பெரியார் போட்டுக்கொடுத்த அந்த விதைதான் காரணம்.

கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையும் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என்று உரைத்த "சட்டகங்களுக்குள் பொருந்தாத தலைவன்" பெரியாரை தமிழ்நாடு மட்டுமன்றி இன்று தேசமே அவரின் நினைவு நாளை முன்னிட்டு நினைவு கூறி வருகிறது. பல ட்விட்டர் பயனாளிகள் பெரியாரின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து ட்விட்டரில் அவரை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். பெரியார் ஏன் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி மொத்த இந்தியாவிற்கும் தேவை என்பதை காரணங்களோடு அடுக்கி ட்வீட் செய்து வருகிறார்கள்.

அந்த விதைதான் காரணம்: பெரியாரின் ஆலய நுழைவு போராட்டம், சமூக நீதி போராட்டம், அம்பேத்காருக்கு முன்பாகவே தலித் மக்களின் சம உரிமைக்காக குரல் கொடுத்தது, அம்பேத்கார் மீது பெரியார் வைத்திருந்த அன்பு, இரண்டு தலைவர்களும் மக்கள் விடுதலைக்காக நாடு முழுக்க குரல் கொடுத்த விதத்தை பாராட்டி நெட்டிசன்கள் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

மனிதர்கள் சந்திக்கும் இழிநிலைக்கு கடவுள்தான் காரணம் என்றால் கடவுளையும் அழித்திடு, மதம்தான் காரணம் என்றால் அதை அழித்திடு. மனுதர்மம், கீதா, அல்லது வேறு புராணங்கள் காரணம் என்றால் அதை சுட்டு பொசுக்கிவிடு. கோவில், குளம், விழாக்கள்தான் உன் இழிநிலைக்கு காரணம் என்றால் அதை புறக்கணித்துவிடு.. இதுதான் நமது அரசியல்.. இதை வெளியே வந்து வெளிப்படையாக கூவு என்று பெரியார் கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்து பலர் போஸ்ட் செய்து வருகின்றனர்.

தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 24.12.2023 ஞாயிற்றுக்கிழமை இன்று தமிழ்நாடு முழுக்க பல்வேறு கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+