பிப்.1ம் தேதி பள்ளிகள் திறப்பு.. 4 நாள்தான் இருக்கிறது.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 1ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பள்ளிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்று பள்ளிக் கல்வித்துறை மூலம் தரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவு நேர லாக்டவுன் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது. ஞாயிறு லாக்டவுன் இந்த வாரத்தோடு முடிவிற்கு வருகிறது.
வழிபாட்டு தலங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிகள் பிப்ரவரி 1ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 2020ல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின் கொண்டு வரப்பட்ட தளர்வுகள் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டது. 2021ல் இரண்டாம் அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. அதன்பின் 2021 பிற்பகுதியில் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் கிளாஸ்கள் நடந்து வந்தன.

பள்ளிகள் திறப்பு
இந்த நிலையில் ஜனவரி மாதம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு பள்ளிகளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த போது திடீரென பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வந்த காரணத்தால் பள்ளிகள் ஜனவரி 31ம் தேதி வர மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் திருப்புதல் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு பள்ளி வகுப்புகள்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் சார்ந்துள்ள நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 1ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று பள்ளிக்கல்வித்துறை மூலம் வெளியிடப்பட்டது. மாணவர்கள் அனைவரும் நேரடியாக பள்ளிகளுக்கு வந்து படிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
இதை தொடர்ந்து பள்ளிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்று பள்ளிக் கல்வித்துறை மூலம் தரப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இருக்கும் பள்ளிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பல மாதங்களாக வகுப்பறைகள் பயன்பாட்டில் இல்லை. இதனால் உடனடியாக வகுப்புகளை சுத்தம் செய்ய வேண்டும்.

என்ன அறிவுரை?
4 நாட்களில் பள்ளிகளை தயார் படுத்த வேண்டும். வகுப்பறைகளை தண்ணீர் ஊற்றி கழுவிவிட வேண்டும். மேலும் கிருமி நாசினி தெளித்து வகுப்பறைகளை கழுவி விட வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆசிரியர்கள் வெளியூர்களில் இருந்து உடனே தங்கள் பள்ளிகள் உள்ள ஊர்களுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications