சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 நாளுக்கு பிறகு.. தமிழகத்தில் இன்று மறுபடியும் அதிகரித்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. மொத்தம் 1323

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Recommended Video

    ஒரே நாளில் 62 பேர் குணமடைந்தனர்... முதல்வர் சொன்ன தகவல்

    வழக்கமாக மாலை நேரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் அல்லது தலைமைச் செயலாளர் சில நேரங்களில் அமைச்சர் விஜயபாஸ்கர் யாராவது செய்தியாளர் சந்திப்பு நடத்தி அன்றைய தின நிலவரத்தை கூறுவது வழக்கம்.

    இன்று அரசு அறிக்கை மூலமாக இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 என்ற எண்ணிக்கையிலிருந்து 1323 ஆக உயர்ந்துள்ளது.

    திருப்பூரில் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா நோயாளி எண்ணிக்கை.. விழிப்புணர்வு பணியில் களமிறங்கிய போலீசார்திருப்பூரில் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா நோயாளி எண்ணிக்கை.. விழிப்புணர்வு பணியில் களமிறங்கிய போலீசார்

    3 நாள் நிலவரம்

    3 நாள் நிலவரம்

    அதாவது இன்று மட்டும் புதிதாக 56 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை 29 ஆயிரத்து 673 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி புதிதாக 31 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஏப்ரல் 15ஆம் தேதி 38 பேரும், நேற்று அதை விட குறைவாக 25 பேரும் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று மறுபடியும் பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து உள்ளது.

    சிலர் கருத்து

    சிலர் கருத்து

    அதே நேரம் நேற்று 25 என்பது மதியம் முதல்வர் அளித்த பேட்டியின்போது தெரிவிக்கப்பட்டது. மாலையில் செய்தியாளர் சந்திப்பு நடக்கவில்லை. எனவே 24 மணி நேரத்தையும் தாண்டி விட்டதால், நோயாளி எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கலாம் என்றும் சில சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    அதிகரிப்பு

    அதிகரிப்பு

    ஆனால், எப்படி இருந்தாலும் சீரான அளவுக்கு புதிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பது முக்கியமாக பார்க்கப்பட வேண்டியதாக இருக்கிறது. மேலும், அந்த அறிக்கையில் இதுவரை வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 15 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் அதிகம்

    சென்னையில் அதிகம்

    இந்த அறிக்கையின்படி, சென்னையில் இன்று புதிதாக 11 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் அங்கு 228 பேர் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் இன்று புதிதாக எந்த நோயாளியும் கண்டறியப்படவில்லை. அங்கு மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 127 ஆக உள்ளது. திருப்பூர் 80 நோயாளிகளுடன் மூன்றாவது இடத்திலும், 70 நோயாளிகளுடன் ஈரோடு நான்காவது இடத்திலும், 66 நோயாளிகளுடன் திண்டுக்கல் ஐந்தாவது இடத்திலும் 58 நோயாளிகளுடன் திருநெல்வேலி ஆறாவது இடத்திலும் உள்ளன.

    English summary
    Tamilnadu register as much 56 new coronavirus patients on today, total number has been increased to 1323.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X