தேசதுரோக வழக்கு அதிகம் பதியப்படும் மாநிலங்கள்.. பீகார் முதலிடம்.. ஷாக் தந்த தமிழ்நாடு.. இவ்வளவு கேஸா
சென்னை: தேசதுரோக வழக்கு அதிகம் பதியப்படும் மாநிலங்களில் பீகார் முதலிடம் வகிக்கும் நிலையில் தமிழ்நாடுஇரண்டாம் இடம் வகிக்கிறது.
இந்தியாவில் சமீப நாட்களாக தேசதுரோக வழக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது வழக்கு போடப்பட்டது போக கேள்வி கேட்பவர்கள் போராட்டம் செய்பவர்கள் என்று எல்லோரும் மீதும் சரமாரியாக வழக்கு பதியப்படுகிறது.
முக்கியமாக மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நபர்கள், அரசு அறிவிப்புகளுக்கு எதிராக போராடும் நபர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள் என்று பலர் மீது தேசதுரோக வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

லிஸ்ட்
இந்த நிலையில் இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் அதிக தேசதுரோக வழக்கு போடப்படுகிறது என்ற விவரம் வெளியாகி உள்ளது. 3762 பேர் கடந்த 2010-2014ல் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. 2014-2020 பாஜக ஆட்சியில் இது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 7136 பேர்கள் மீது 2014-2020ல் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
தேசதுரோக வழக்கு அதிகம் பதியப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது. பீகார் மாநிலம் இதில் முதலிடம் வகிக்கிறது. கடந்த 2010ல் இருந்து 2020 வரை பீகாரில் 168 தேசதுரோக வழக்கு பதியப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே பீகாரில்தான் அதிக வழக்கு பதியப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம்
அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 139 தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 115 வழக்கு போடப்பட்டுள்ளது. ஜார்கண்டில் 62 தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 50 தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த 5 மாநிலங்களில் மட்டும் 534 தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது.

கர்நாடகா
இந்தியாவில் போடப்பட்ட தேசதுரோக வழக்குகளில் 65% கேஸ்கள் இந்த 5 மாநிலங்களில் போடப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் கர்நாடகாவில் தேசிய நலன் தொடர்பான பிரச்சனைகளில் தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு பகுதி இந்தியாவில் நக்சல் மற்றும் இடதுசாரி அமைப்பினர் மீது தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது.

கூடங்குளம்
தமிழகத்தில் மக்கள் உரிமை போராட்டங்கள், சில திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது. உதாரணமாக மீத்தேன் போராட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் என்று பல போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் மீது தமிழ்நாட்டில் தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது.

காரணம்
2011ல் மட்டும் 130 தேசதுரோக வழக்கு கூடங்குகளத்திற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் மீது போடப்பட்டுள்ளது. அந்த வருடம் போடப்பட்ட மொத்த கேஸ்களில் இது 40% ஆகும். இது போக 2019ல் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் செய்த 118 பேரும், 2020ல் இதே போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களில் 107 பேர் மீதும் தேசதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு எப்படி?
தமிழ்நாடு அசம்பாவிதங்கள், குற்றங்கள் நடக்காத அமைதி மாநிலம். ஆனாலும் மக்கள் உரிமை போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். எந்த தவறான திட்டம் வந்தாலும் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். மக்கள் பலர் தங்கள் உரிமையை காப்பதற்காக போராட்டங்களில் ஈடுபடுவதும் கூட தேசதுரோக வழக்கு அதிகம் பதியப்பட காரணமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications